(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

அதே சமயம் அவர்கள் வந்ததை அறிந்த நாச்சியாவும் தன் அறையை விட்டு வெளியேறி நடந்து வந்தாள். அவளின் கால் கொலுசு சத்தம் கேட்டு அனைவருவமே சத்தம் வந்த திசையில் பார்த்தார்கள், மிரண்டார்கள், நாச்சியாதான் கம்பீரமாக நடந்து வந்தாள். அவளை ஒரு நொடி பார்த்து விட்டு அடுத்த நொடி ஆண்டாள் நாச்சியா போட்டோவை பார்த்தனர் அனைவரும், மறுபடியும் அவளையும் போட்டோவையும் மாறி மாறி பார்த்து திகைத்தார்கள். அதிலும் அகத்தியனோ தன் தாத்தாவிடம்

  

”தாத்தா எனக்கொரு சந்தேகம் நாச்சியா எப்படி பாட்டி போல இருக்கா, இல்லை பாட்டிதான் நாச்சியா போல இருக்கற மாதிரி தெரியுதா சொல்லுங்க தாத்தா” என கேட்க அவரோ நொந்துப் போய் தலையில் கைவைத்து விட்டார்.

  

அங்கமுத்து உடனே வேலையாட்களை வரவழைத்து

  

”யார்டா அந்த போட்டோவை அங்க வைச்சது, எடுங்க எடுத்து குடோன் ரூம்ல போடுங்க” என அதட்ட வேலையாட்கள் அசையவில்லை, அதற்குள் அகத்தியனோ

  

”எதுக்கு மாமா பாட்டி போட்டோவை எடுக்க சொல்றீங்க இருக்கட்டுமே“

  

”வேண்டாம் அகத்தியா பாட்டியோட நினைவில உன் தாத்தா வாழறாரு, அந்த போட்டோவை பார்த்து மறுபடியும் அவர் கவலையில படுத்த படுக்கையா ஆயிடுவாரு, அவர் பாவம்லயா” என சொல்ல தாத்தாவும்

  

”ஆமாம் ஆமாம் முதல்ல அந்த போட்டோவை எடுங்க” என கத்தினார். அகத்தியனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.  வேலையாட்கள் இன்னும் அசையவில்லை. அதை இன்னும் யாரும் கவனிக்கவில்லை

  

நாச்சியாவோ  மென்மையாக சிரித்துவிட்டு

  

”அதுவும் சரிதான் அசல் இருக்கறப்ப நகலுக்கு என்ன வேலை, அந்தப் போட்டோவை இங்கிருந்து அப்புறப்படுத்துங்க” என கட்டளையிட உடனே வேலையாட்கள் அவள் சொன்னதை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.