”இனி நீ இங்கதான் இருக்கனும் நாச்சியா”
”வேணாம் நான் இங்க இருந்தா பிரச்சனைதான் வரும், வீட்டோட அமைதி குலையும், என் தலையெழுத்து என்னவோ அதுபடி நான் வாழ்ந்துக்கிறேன் நான் போறேன்“
”இல்லை போகாத நீ என் மனைவி, இங்கதான் நீ இருக்கனும், உனக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு“
“உங்களுக்கே என் மேல விருப்பம் இல்லாதப்ப இந்த உரிமை எனக்கு எதுக்கு”
“கொஞ்சம் புரிஞ்சிக்க, நாச்சியா கொஞ்ச நாள் போனா என் மனசு மாற வாய்ப்பிருக்கு எனக்காக நீ காத்திருக்க மாட்டியா“
”உங்களுக்காக காலம் முழுக்க காத்திருக்க நான் தயார் ஆனா, உங்க வீட்டாளுங்க என்னை விரட்டறதிலேயே குறியா இருக்காங்க, நீங்க இல்லாத சமயம் அவங்க என்னை விரட்டிட்டா என்ன செய்றது, ஊர்க்காரங்க வேற கண்கொத்தி பாம்பால அலையறானுங்க, நான் வெளிய வந்த அடுத்த நொடி அவங்கவங்க தங்களோட விருப்பத்தை நிறைவேத்திக்கதான் பார்ப்பாங்க, திருமதி அகத்தியனை ஒரு விபச்சாரியாக்கி அழகு பார்ப்பாங்க இது தேவையா”
”யாரும் உன்னை நெருங்க மாட்டாங்க, உன் நிழலை கூட தொடமாட்டாங்க, என்னை நம்பு நாச்சியா” என சொல்ல அவள் சற்று அமைதியாகி
”எனக்கு பசிக்குது காலையில இருந்து எதுவும் சாப்பிடலை, நடந்த விசயங்களால நான் ரொம்ப களைச்சிப் போயிட்டேன் என் பசி ஆத்த ஏதாவது கிடைக்குமா“ என அவள் கை ஏந்தி கேட்கவும் அவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது
”சே உன்னை காப்பாத்த நினைச்சி கூட்டிட்டு வந்து உன்னை இப்படி பட்டினி போட்டுட்டேனே முட்டாள் நான், நீயாவது பசிச்சா போய் சாப்பிட வேண்டியதுதானே“
”நானா நான் எப்படி, இது உங்க வீடு, நான் சொன்னா இங்கிருக்கற வேலையாட்கள்