(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

நாச்சியாவோ வேலையாட்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் வைக்க, அவர்களும் மரியாதையாக வணக்கம் வைத்தார்கள் அடுத்து அவள் அவர்களைப் பார்த்து

  

”காலையில இருந்து நான் எதுவும் சாப்பிடலை உங்களால முடிஞ்சா எனக்கு கூழோ கஞ்சியோ தர முடியுமா இல்லைன்னா நானே போய் சமைச்சி சாப்பிட்டுக்கவா” என அவர்களிடம் அனுமதி கேட்க அகத்தியனோ

  

”நீ எதுக்காக சமைக்கனும் நாச்சியா, வேண்டாம் உனக்கு என்ன வேணும்னு அவங்ககிட்ட சொல்லு போதும், அவங்க செய்து தருவாங்க”

  

”அப்போ எனக்கு கூழோ கஞ்சியோ தந்தா கூட போதும்”

  

”எது கூழா ப்ச் நீ எங்க இருக்க தெரியுமா, இந்த வீட்டுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க நாச்சியா” என சொல்ல அவளோ அந்த வேலையாட்களைப் பார்த்து வரிசையாக உணவு வகைகளை சொன்னாள், அவள் சொன்ன அனைத்துமே ஆண்டாள் நாச்சியா விரும்பி உண்பது அதன் காரணமாக அந்த வீட்டில் நீண்ட ஆண்டுகளாக வேலை செய்த பழைய வேலையாட்கள் மகிழ்வுடன் அவள் சொன்னதை செய்யச் சென்றார்கள். அவர்கள் சென்றதும் நாச்சியா தாத்தாவைப் பார்த்தாள், அவரோ இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என யோசிக்க நாச்சியாவோ

  

”என்ன பலமா யோசிக்கறீங்க”

  

”நீ சொன்ன உணவுகள் எல்லாமே என் மனைவிக்கு மிகவும் பிடிச்சது, அவள் அடிக்கடி விரும்பி சாப்பிடறது, அது எப்படி உனக்கு தெரியும்“

  

”அப்படியா எனக்குத் தெரியாதே நான் எனக்கு பிடிச்சதை சொன்னேன்” என சொல்ல உடனே அங்கமுத்துவோ

  

”நீயே கீழவீதி பொண்ணு, ஏழை இத்தனை வெரைட்டி உணவுகளை நீ கனவுல கூட பார்த்திருக்க மாட்ட”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.