(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”பொறு நாச்சியா எந்த ஒரு பிரச்சனைக்கும் சாவு ஒரு தீர்வு கிடையாது”

  

”என்னோட பிரச்சனைக்கு வேற என்னதான் தீர்வு சொல்லுங்க” என அவனின் சட்டையை பிடித்து உலுக்கி அழுதபடியே அவனது நெஞ்சில் தலையை சாயத்துக் கொள்ள அவனோ அவளுக்கு ஆறுதல் தரும்பொருட்டு அவளின் தோளை தடவி தட்டிக் கொடுக்க அதைக்கண்ட வேலையாட்கள் அவ்விடம் விட்டு அகன்றனர். அவளோ தேம்பி தேம்பி அழுதாள் சில நொடிகள் கழித்து விக்கி விக்கி அழுதாள், சில நொடிகள் கழித்து விசும்பினாள், சில நொடிகள் கழித்து அமைதி நிலவியது. அவனோ என்னவென பார்க்க அவள் உறங்கிக் கொண்டிருந்தாள், அதைக்கண்டு வியந்தவன் அவளை எழுப்ப மனமின்றி அப்படியே அவளை தன் கையில் ஏந்திக் கொண்டு அவளுக்கென அவன் ஒதுக்கிய அவனது பாட்டியின் அறைக்குச் சென்றான்.

  

அவனது செயலை அங்கிருந்த அனைவருமே பார்த்தும் பார்க்காதது போல கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.

  

அறைக்குள் இருந்த படுக்கையில் அவளை படுக்க வைத்துவிட்டு போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டு பார்த்தான்.

  

”அய்யோ பாவம் சே இவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டேனே, என்னவோ செய்ய போக அது என்னவோ ஆயிடுச்சி, நாச்சியா சொல்றதும் சரிதான், நான் அவளை என் மனைவியா நடத்தலைன்னு தெரிஞ்சா ஊர்காரங்க மறுபடியும் பிரச்சனை செய்வாங்க இப்ப என்ன செய்றது” என தனக்குள் சொல்லிக் கொண்டே நாச்சியாவை பார்த்தான்

  

அழகான வட்ட முகம் மாசு மருவின்றி வெண்ணெய் நிறம் அப்படியே அவனுக்கு அவனது பாட்டியின் நினைவு வந்தது

  

”பாட்டியை நான் பார்த்ததில்லை முதல் முறை இன்னிக்குதான் நான் பார்க்கிறேன் ஆனா, பாட்டியும் நாச்சியாவும் ஒரே மாதிரியான முகச்சாயல்ல இருக்காங்களே அது எப்படி இல்லை பதட்டத்தில நான் சரியா கவனிக்கலையா போய் பார்க்கிறேன்” என உளறியபடியே அவன் அவசர அவசரமாக வெளியேறிச் செல்ல அந்த சத்தம் கேட்டு மெல்ல கண்கள் திறந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.