”அதை சொல்ல மாட்டேங்கறாங்களே கோர்ட்லதான் சொல்வாங்க போல இருக்கு”
”பயமாயிருக்கா உங்களுக்கு”
“ஆமாம் அன்னிக்கு அவன் மயங்கிட்டான்னு விட்டுட்டு போனது தப்பா போச்சி மாதவி”
”அப்ப இருந்த சூழ்நிலையில என்னை பாதுக்காக்கனும்னு நினைச்சீங்க, ஆனா இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்னு நாம என்ன அன்னிக்கு நினைச்சோமா”
”நிஜமாவே செத்தது சிலம்புதானா”
”அப்படித்தான் சொல்றாங்களே பார்ப்போம்” என்றவன் கண்ணகியைப் பார்த்தான் அவளோ வீம்பாக அமர்ந்திருக்க அதைக்கண்டு சிரித்தவன்
”இங்க நான் கத்தி மேல நிக்கறேன், அவளை பாரு குழந்தை போல கோச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கா போ போய் அவளை சமாதானம் செய்”
”இது அநியாயம் நீங்களே போய் பேசி சமாதானம் செய்ங்க”
”நானா? ஏற்கனவே இங்க என் மேல கொலைபழி விழுந்திருக்கு, இதுல இவள்கிட்ட போனா சரியா வராது, நான் இருக்கற பிரச்சனையை பார்க்கிறேன், நீயே போய் அவளை பார்த்துக்க” என சொல்ல மாதவியும் சரியென தலையாட்டிவிட்டு கண்ணகியிடம் சென்றாள்
”கண்ணகி என்னடி இப்படி வந்து உட்கார்ந்திருக்க”
”ம் உங்களுக்கு நடுவில தொந்தரவா நான் இருக்க கூடாதுன்னு வந்துட்டேன் போதுமா” என எரிந்து விழ மாதவியோ கலகலவென சிரித்துவிட்டு
”ஏய் அவர் உன்னை வெறுப்பேத்தறாரு அவ்ளோதான் சும்மாடி இதெல்லாம் கோச்சிக்காத”