”போடி என்னவோ நீ சொன்ன அவர் என்னைதான் நினைக்கறாருன்னு பாரு நீ வந்ததும் உடனே உன்கிட்ட போயிட்டாரு”
”பைத்தியம் நான்தான் சொல்றேன்ல, அவர் உன்னை அழவைச்சி வேடிக்கைப் பார்க்கறாரு இதெல்லாம் சும்மா தமாசுக்கு”
“இதுவா தமாசு போடி எனக்கு எப்படியிருந்தது தெரியுமா”
”பயப்படாத கோவலன் என்னிக்குமே கண்ணகிக்குதான் சொந்தம், சரி சரி வா உள்ள போலாம், இப்ப நமக்கு இருக்கற ஒரே பிரச்சனை கோவலனை காப்பாத்தறதுதான், அதை முதல்ல பார்க்கலாம் மத்த பிரச்சனையை ஆர அமர தீர்த்துக்கலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
கோர்ட்டுக்குள் அனைவரும் அமர்ந்த பின் ஜட்ஜ் வந்தார், அவர் வரவும் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார்கள், அவர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தார்கள், முதல் வழக்கே கோவலனுடையது, அதனால் அவனை நிறுத்தினார்கள், அவனுக்கு எதிராக பல ஆதாரங்களை வைத்தார்கள், சிலம்புவிடம் சண்டையிட்ட போது கோவலனது சில பொருட்கள் விழுந்திருந்தது, அதோடு சிலம்புவின் சட்டையில் கோவலனின் கைரேகை இருக்கவும் கோவலன்தான் கொலை செய்ததாக கூற கண்ணகி அதிர்ந்தாள்.
கோவலன் சார்பாக வக்கீல் பேசி வாய்ப்பு கேட்க அதற்கு ஜட்ஜ் அனுமதி தந்தார். அதற்காக ஒரு வாரம் கழித்து தேதி சொல்லிவிட மீண்டும் கோவலனை அழைத்துக் கொண்டு சென்றனர் போலீஸார்
அவனைப் பார்க்க கூட கண்ணகி மாதவி வந்தும் போலீசார் தடுத்தார்கள் ஆனாலும் இரு பெண்களும் கலங்கிய கண்களுடன் நிற்க அதைக்கண்ட கோவலன்
”கண்ணகி நீ அழுதா அழகாயிருக்க” என சொல்ல உடனே கண்ணகியின் அழுகை நின்றது மாதவிக்கு சிரிப்பே வந்தது, எப்படியோ இரு பெண்களின் அழுகையை நிறுத்தினான் அடுத்து