(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

  

“சாரி சக்தி மேம். இந்த நேரத்துல பொதுவா யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க. குளிர் காலம் வேற. அதான் ஜூப்பிட்டரை இந்த ரோஸ் செடிக்கு பாதுகாவலனா செட் செய்து டெஸ்ட் செய்துட்டு இருந்தேன். அது தாவி வருமே தவிர வேற எதுவும் செய்யாது. பயமுறுத்துற மாதிரி தான் செட் செய்திருந்தேன்!”

  

சக்தி பூவைத் தொட போன போது தாவி வந்த ஜூப்பிட்டர், அதற்கு பிறகு எதனால் அமைதியாக செடியின் முன்னால் போய் நின்றது என்று சக்திக்கு இப்போது புரிந்தது.

  

“இருந்தாலும் இது தப்பு... சாரி, உங்க பேரு எனக்கு ஞாபகம் இல்லை???”

  

“என் பேரு வினாயக்!”

  

“வினாயக், உங்க டெஸ்ட், செக் எல்லாம் லேப்ல வச்சு செய்யனும். இது பொதுமக்களுக்கு ஆபத்தான டெஸ்ட்!”

  

“நீங்க சொல்றது கரக்ட் தான் சக்தி மேம். இருந்தாலும் ஜூப்பிட்டருக்கு ஃபீல்ட் டெஸ்ட் செய்யலாம்னு பார்த்தேன்!”

  

“ஆமா, நீங்க எங்கே இங்கே மதியூர்ல? இங்கே ரிசெர்ச் லேப் ஏதாவது இருக்கா என்ன?”

  

“லேப் ஏதாவது இருக்கான்னு எனக்கு தெரியாது. ஆனால் நான் இப்போ ரிசெர்ச் லேப்ல வேலை செய்யலை. சொல்ல போனா வேலையே செய்யலை!”

  

“உங்களுக்கு வேலை இல்லையா?? நம்பவே முடியலை?”

  

“நான் கடைசியா வேலை செய்த கம்பெனில இருந்து என்னை துரத்தி விட்டுட்டாங்க. அதுக்கு அப்புறம் நான் வேற வேலைல ஜாயின் செய்யலை. ஒரு சைபார்க் டெவலப் செய்துட்டு இருந்தேன்.”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.