(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

“அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுது!”

  

வினாயக் சிரித்தான்.

  

“அதுக்கு டைம் இல்லை சக்தி மேம். இந்த ஜூப்பிட்டரை இன்னும் மூணு வாரத்துல ப்ராடக்ட்டா ரிலீஸ் செய்யப் போறேன். இது ஃபைனல் டெஸ்டிங்.”

  

சக்தி ஜூப்பிட்டரை பார்த்தாள். அதுவும் இப்போதும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

  

“வினாயக், எனக்கு ஒரு சந்தேகம். என்னடா இப்படி முகத்துல அடிக்குற மாதிரி கேட்குறாளேன்னு யோசிக்காம பதில் சொல்ல முடியுமா?”

  

வினாயக் ஜூப்பிட்டரை கையில் தூக்கிக் கொண்டான்.

  

“அடிச்சு தாக்குற கேள்வி கேட்க போறீங்கன்னு தெரியுது. கேளுங்க. வாங்க, நடந்துட்டே பேசுவோம்!”

  

ஜாகிங் பற்றி யோசித்த சக்தி, பரவாயில்லை ஒரு நாள் விட்டு விடலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டாள். வினாயக்குடன் இணைந்து நடந்தாள்.

  

“வினாயக், நீங்க புத்திசாலி. அதி புத்திசாலின்னும் தெரியுது. ஆனால் எதனால உங்க அறிவு இப்படி யோசிக்குதுன்னு எனக்குப் புரியலை. உலகத்துல நாய்களுக்கு பஞ்சம் இருக்கா என்ன? எத்தனையோ ரக நாய்ங்க இருக்கு. பாசமா வளர்க்க தான் ஆளுங்க இல்லைன்னு சொல்றாங்க. அப்படி இருக்கும் போது இந்த எலக்ட்ரானிக் நாய் தேவையா?”

  

“நல்ல கேள்வி. ஆனால் நீங்க நினைக்குற மாதிரி இது உயிருள்ள நாய்களை ரிப்ளேஸ் செய்ய வந்தது கிடையாது. இது நாய், பூனைன்னு எல்லா விதமான பெட்ஸ் கூடவும் ஃபிரென்ட்லியா இருக்கும். எல்லாமே நாம செட் செய்து வைக்குறதுல இருக்கு. இதை மெயினா நான் செய்தது வயசானவங்களுக்காக. இதுக்கு மெயின்டனன்ஸ் ரொம்ப கம்மி. அதுவே தன்னை சார்ஜ் செய்துக்கும். மூணு மாசம் வரைக்கும் பேட்டரில வேலை செய்யும். கம்பானியனாவும்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.