பாட்டி வீட்ல வளர்ந்த சிலம்பு அப்பவும் பல தவறுகளை செய்தான். ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதெல்லாம் என் அம்மா என்னை கூப்பிடுவாங்க, நான் போய் பணம் கொடுத்து அந்த தப்பை மறைச்சி என் மகனை காப்பாத்தி வந்தேன், அவனுக்காக செலவு செய்த பணத்தை கூட நான் வேலை பார்த்த கோவலன் கலைக்கல்லூரியில இருந்துதான் எடுத்துக்கிட்டேன், என்னை நம்பியிருந்த ஈஸ்வரமூர்த்திக்கே நான் துரோகம் செய்தேன்” என சொல்லி மீண்டும் ஒரு அழுகை.
அவர் சொல்ல சொல்ல கோவலன் அரண்டான், ஏற்கனவே இந்த கதையெல்லாம் மாதவிக்கு தெரிந்தபடியால் ஏன் கண்ணகி இன்னும் வரவில்லை என்றே பதட்டமாக வாசலை பார்த்தபடி இருந்தாள்.
ஜட்ஜோ
”அப்புறம் என்னாச்சி சொல்லுங்க, கோர்ட் நேரத்தை நீங்க வீணடிக்கறீங்க” என சொல்ல உதயமூர்த்தியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசினார்
”கான்வென்டில கோவலனும் படிச்சிக்கிட்டு இருந்தான், அவனை பத்தி தெரிஞ்சிக்கிட்ட சிலம்பு எப்படியோ அவன்கூட பழகி நண்பனானான், கோவலனை பார்க்க வாரம் ஒரு முறையாவது அவனோட அப்பா அம்மா ஊட்டிக்குப் போவாங்க, எஸ்டேட் பங்களால தங்குவாங்க, அப்பலாம் சிலம்புவையும் கோவலன் தன் கூடவே வைச்சிருந்தான், அவங்க நட்பை கண்டு கோவலனோட அப்பா அம்மா கூட ஆச்சர்யப்பட்டாங்க.
அவங்ககிட்ட சிலம்பு நல்ல பெயர் எடுத்தான், தான் ஒரு அநாதைன்னும், தன்னை யாரோ படிக்க வைக்கறதாவும், தனக்கும் அப்பா அம்மா பாசம் வேணும்னும் நடிச்சான், அந்த நடிப்பை நம்பி கோவலனோட அப்பா அம்மா அவனை தத்து எடுக்கலாம்னு முடிவு எடுத்தாங்க, தத்து எடுத்தா தனக்கு சொத்து வரும்னு சிலம்பு ஆசைப்பட்டான்.
ஆனா இந்த விசயத்துக்கு ஈஸ்வரமூர்த்தி தடையா இருந்தாரு, மகனையும் மருமகளையும் உடனே ஊருக்கு வர சொன்னாரு, ஈஸ்வரமூர்த்தியை எதிர்த்து தங்களால எதையும் செய்ய முடியாது என கைவிரிச்சிட்டாங்க, அதுல சிலம்புவுக்கு கோபம், அதுல அவன் கோபத்தில