(Reading time: 28 - 56 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

நடந்ததைக் கூற அவனோ அதிர்ச்சியானான்

  

”நிஜமாவா சொல்ற மாதவி”

  

”ஆமாம் கோவலன் உங்களுக்கு இது தெரியாதா“

  

”தெரியாது ஊட்டி கான்வென்ட்டில நான் படிச்சப்ப கூட படிச்சவன் சிலம்பு அவ்ளோதான் எனக்குத் தெரியும், கூட படிச்சவனை வேலைக்கு வைச்சேன் ஆனா அவன் உதயமூர்த்தியோட மகன்னு எனக்குத் தெரியாது மாதவி“

  

”இப்ப அந்த உதயமூர்த்தி எங்கன்னு தெரியலை கோவலன்”

  

”நாளைக்கு தீர்ப்பு சொல்லப்போறாங்க, உதயமூர்த்தியை பிடிச்சாதான் சிலம்பு இருக்கற இடம் தெரியும்“

  

”நான் அந்தாளை கண்டுபிடிக்கிறேன், கண்ணகியும் சிலம்புவை தேடிக்கிட்டு இருக்கா கிடைச்சதும் இருக்கு அவனுக்கு” என கோபம் கொண்டாள் மாதவி

  

”மாதவி”

  

”ம்”

  

“கண்ணகி சாப்பிட்டாளா பாவம் அவள் என்னை நினைச்சி கவலையா இருப்பாளே” என வருந்த

  

”ஏன் கோவலன் நான்கூடதான் இன்னும் சாப்பிடலை, நான் பாவம்லயா நானும் உங்களை நினைச்சிதானே கவலையா இருக்கேன், அது தெரியலையா உங்களுக்கு, தாலிகட்டின மனைவியை மட்டும் நினைவுல வைச்சிருக்கீங்க, உசுருக்கு உசுரா காதலிச்ச காதலியை மறந்துட்டீங்களே, போங்க கோவலன் நான் உங்க மேல கோபமா இருக்கேன், முதல்ல உங்களை காப்பாத்தனும் அப்புறம் உங்களுக்கு யார் வேணும்னு நீங்கதான் முடிவு செய்யனும், நானா இல்லை கண்ணகியா இப்ப இருந்தே யோசிச்சி வைச்சிக்குங்க கோவலன், நான் போறேன்” என கடகடவென சொல்லிவிட்டு அவள் சென்றுவிட கோவலனோ அதிர்ந்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.