(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

சில மணி நேரம் கழித்து மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள் ஹரிணி. அதே காவல் நிலையத்தில் பெஞ்சில் படுத்தபடி இருக்க மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அதற்குள் இன்ஸ்பெக்டர் மதியழகி வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஹரிணி மெதுவாக எழுந்து அவரிடம் சென்றாள், அவளின் வருகையைக் கண்ட மதியழகியோ

  

”என்ன வேணும் உனக்கு” என கேட்க ஹரிணி பதில் அளிக்கவில்லை சோர்வாக அவரின் முன் நின்றாள்

  

”இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட எடுபடாது, எவ்ளோ திமிரு இருந்திருந்தா கல்யாணம் ஆகி 6 மாசம் கூட ஆகலை, அதுக்குள்ள புருஷனை கொன்னுட்டு நிக்கற உன்னையெல்லாம் நாலு சாத்து சாத்தினாதான் என் கோபம் அடங்கும்” என கத்த அதற்கு ஹரிணியோ

  

”தண்ணி வேணும் தாகமா இருக்கு மேடம் ப்ளீஸ்” என்றாள் ஈனமாக அதற்காகவே தன் முன் இருந்த டேபிளில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்த மதியழகி கோபத்தில் கீழே ஊற்றினாள், அதற்காக கவலையில்லாமல் ஹரிணி அங்கிருந்து மெதுவாக நடந்து மறுபடியும் அதே பெஞ்சில் சென்று அமர்ந்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த புடவையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டு அந்த புடவையை பார்த்தாள், அவளின் திருமண புடவை அது அதைக்கண்டும் அவள் இளப்பமாகச் சிரித்தாள்.

  

அதைப் பார்த்த மதியழகி

  

“என்னடி நக்கலா சிரிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க எழு எழு நேரா கோர்ட்டுக்குதான் போகனும் அங்கயாவது கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு எழுடி” என அவளின் கையை பிடித்து இழுக்க அவளோ

  

”நானே வரேன்” என சொல்ல மதியழகியும் அமைதியாகாமல்

  

”ஏன் இங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்க்கறியா வாவா இன்னிக்கு உனக்கு தண்டனை வாங்கித்தராம நான் ஓயமாட்டேன் எழுடி” என அவளது கையை பிடித்து பலமாக இழுத்துக் கொண்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறி வண்டியில் அவளை ஏற்றிவிட்டு தானும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.