(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

வைக்கற, உன்னோட சொந்த விருப்பு வெறுப்புகளை கேட்க இங்க யாருக்கும் நேரம் இல்லை, நேரடியா விசயத்துக்கு வா, எதுக்காக உன் புருஷனை கொலை செய்த சொல்லு” என அதட்ட ஜட்ஜம்மாவோ

  

”அமைதியா இருங்க உங்களால சரியான ஆதாரத்தையோ சாட்சியத்தையோ தரமுடியலை ஆனா, இந்த வழக்கை முடிக்கறதுல இவ்ளோ வெறித்தனமா இருக்கீங்களே ஏன்”

  

”அப்படியெல்லாம் இல்லை யுவர் ஆனர் அது வந்து நீதிமன்றத்தோட நேரத்தை வீணாக்க கூடாதுன்னுதான் அப்படி பேசினேன்”

  

”அதை பத்தி நீங்க கவலைப்பட வேணாம், உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா போய் பார்த்துட்டு வாங்க, நான் விசாரணை செய்துக்கிறேன்” என சொல்ல வக்கீல் அதிர்ந்து அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்துவிட ஜட்ஜோ

  

”நீ சொல்லும்மா நான் கேட்கறேன், எனக்கு எந்த அவசரமும் இல்லை நீ நிதானமா உன் கதையை சொல்லு” என சொல்ல ஹரணி 6 மாதத்திற்கு முன் நடந்ததை நினைவுப் படுத்தி பேசினாள்.

  

”6 மாசம் முன்னாடி எனக்கு இரண்டு விதமான மனநிலைமை இருந்தது, ஒண்ணு மறுமணம் செய்துக்கனும் இல்லைன்னா காலம் முழுக்க என் கணவனை நினைச்சிக்கிட்டு நான் வாழனும், ஒரே குழப்பமான மனநிலையில நான் வழக்கமா பயணம் செய்ற ரயில்ல பலவிதமா யோசிச்சிக்கிட்டு இருந்தேன்” என சொல்ல உடனே வக்கீலோ

  

”என்னது மறுமணமா, என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே, அப்போ உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருக்கு அப்படியா” என கேட்க ஹரிணியும்

  

”ஆமாம் எனக்கு முன்னாடியே ஒரு கல்யாணம் நடந்தது நான் காதலிச்ச இளங்கோவையே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிட்டேன்”

  

”எதுக்காக ரிஜஸ்டர் மேரேஜ் செய்துக்கனும், வீட்ல சொல்லியிருக்கலாமே”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.