முடங்கிக் கிடந்தேன், 2 மாசம் கழிச்சி எனக்கு மெயில்வந்தது, என்னை வேலையை விட்டு எடுத்துட்டாங்கன்னு அதுக்காக நான் கவலைப்படலை, இளங்கோ இறந்ததும் நானும் என் வாழ்க்கையை முடிச்சிக்கலாம்னு நினைச்சேன் ஆனா முடியலை”
”ஏன் முடியலை“
”ஏன்னா நான் அப்ப கர்ப்பமா இருந்தேன், குழந்தைக்காக வாழ ஆசைப்பட்டேன் ஆனா அந்த குழந்தையும் எனக்கு கிடைக்கலை”
”ஏன்”
”இளங்கோவை நினைச்சி வருத்தத்தில இருந்தேன், சரியா சாப்பிடாம தூங்காம இருந்ததால அபார்ஷன் ஆயிடுச்சி, அதை நினைச்சி நான் கவலைப்படாத நாளே இல்லை இப்ப கூட அதை நினைச்சி எனக்கு கஷ்டமாயிருக்கு” என சொல்லி அழுதாள்.
உடனே வக்கீலோ
”சும்மா அழுது அழுது கோர்ட்டோட நேரத்தை வீணாக்க வேணாம், இந்த வழக்கு சம்பந்தமான விசயத்தை பேசுங்க அதை விட்டுட்டு உங்க சொந்த கதை சோக கதையை சொல்லற இடமா இது, இதை கேட்க இங்க யாருக்கும் நேரமில்லை” என கடிந்துக் கொள்ள ஜட்ஜம்மாவோ
”எனக்கு நேரமிருக்கு” என கடுமையாகச் சொல்ல அனைவரும் கப்சிப்பானார்கள்.
”நீ சொல்லும்மா நான் கேட்கறேன்” என ஜட்ஜ் சொல்ல ஹரிணியோ மறுபடியும் தன் பழைய கதையை சொல்லத் தொடங்கினாள்
”காதலனும் குழந்தையும் இல்லாத வாழ்க்கையை நான் வெறுத்தேன், கல்யாணம் ஆனதும் எங்களுக்குன்னு ஒரு தனியா ப்ளாட் வாங்கியிருந்தோம், இப்ப நான் அதுலதான் இருக்கேன் அந்த ப்ளாட்தான் என்னோட உலகமே, அங்கிருக்கறப்ப எனக்கு நிம்மதியா இருக்கும்”
”சரிம்மா சரி இளங்கோவை பத்தி சொல்லிட்ட, இப்ப இறந்துப் போன உன் புருஷனை பத்தி