கொன்னுட்டா, இவளை விடாதீங்க இவளை தூக்குல போடுங்க” என பொங்கியெழ ஜட்ஜோ
”அமைதி அமைதி அமைதி” என சத்தமாக சொல்லவும் அவ்விடமே அமைதியாகிப் போனது.
ஜட்ஜோ தருணின் பெற்றோரிடம்
”தருண் சந்தோஷமா வாழலைன்னு உங்களுக்கு தெரிஞ்சதும், அவரை தேடிப் போய் பார்க்கலையா நீங்க”
”அந்நேரம் எங்களுக்கு அவன் மேல கோபம் இருந்தது, எங்க பேச்சை மீறி இவளை கல்யாணம் செய்துக்கிட்டானேங்கற ஆத்திரத்தில போகல, அவனை தேடி நாங்க வரமாட்டோம்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டே அவனை கொன்னிருக்கா படுபாவி பாதகி”
”ஷ்ஷ்ஷ் இங்க எல்லாம் இப்படி பேசக்கூடாது, அவ்ளோதானே வேற ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கா இருந்தா சொல்லுங்க” என கேட்க அவர்கள் அமைதியானார்கள். அதில் அவரும் அவர்களை அனுப்பி விட்டு ஹரிணியிடம் பேசினார்
”ஹரிணி உண்மையை சொல்லு நீ கட்டாயப்படுத்தியா தருணை திருமணம் செய்துக்கிட்ட”
”சத்தியமா இல்லை தருணோட சம்மதத்தோடவே திருமணம் நடந்தது”
”நீ தருணை விரும்பினியா”
”விருப்பம்னு இல்லை தனியா இருக்கேன், துணையா அவர் வந்தாரு, சேர்ந்து வாழலாம்னு சொன்னாரு, நம்மளோட துக்கத்தை பகிர்ந்துக்கலாம்னு ஆறுதலா பேசினாரு, அந்த நேரம் நானும் இளங்கோவை இழந்திருந்தேன், அவரும் பவானியை இழந்திருந்தாரு, இரண்டு பேருமே துணையை இழந்து வாழ்க்கையை வெறுத்து எதுக்கு வாழறோம்னு தெரியாம இருந்தோம், எங்களோட இந்த எண்ணம்தான் ஒத்துப்போனது. எனக்கு ஆறுதலா அவரும் அவருக்கு ஆறுதலா நானும் இருப்போம்னு நம்பி திருமணம் நடந்தது, முழுக்க முழுக்க அவர் சம்மத்தோடதான் இந்த திருமணம் நடந்தது. நான் கட்டாயப்படுத்தியோ இல்லை என் மேல