(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

இரக்கப்பட்டோ நான் அவர் மேல அனுதாபப்பட்டோ இந்த கல்யாணம் நடக்கலை” என தெளிவாகச் சொல்ல ஜட்ஜ் அதை நம்பினார்

  

”நீ இந்தளவுக்கு தெளிவா பேசறப்ப எதனால தருணை நீ கொலை செய்த”

  

”அதுக்கு காரணம் இருக்கு”

  

”என்ன காரணம் உன்னை அவன் டார்ச்சர் பண்ணானா”

  

”இல்லை நாங்க ரெண்டு பேரும் நல்ல புரிதலோட இருந்தோம்”

  

”அப்புறம் வேற என்ன காரணம், அவரை கொலை செய்ற அளவுக்கு உன்னை தூண்டிவிட்ட அந்த காரணத்தை சொல்லு நான் தெரிஞ்சிக்கிறேன்” என சொல்ல ஹரிணியோ மறுபடியும் தனது பழைய கால கதையைச் சொல்லலானாள்.

  

”நான் இளங்கோவை இழந்தது ஒரு சாலை விபத்துல, தருண் பவானியை இழந்தது அதே ரயில் பயணத்திலதான், ஓடற ரயில்ல இருந்து குதிச்சி தற்கொலை செய்துக்கிட்டா பவானி, அன்னிக்கு நானும் அந்த ரயில்லதான் இருந்தேன், என் கண்முன்னாடியே இதெல்லாம் நடந்தது, நான் தடுக்கறதுக்குள்ள அவள் குதிச்சிட்டா, எனக்கு அப்படியே கைகால் நடுங்கி ஷாக்ல மயங்கியே விழுந்துட்டேன், என்னை ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்க, மறுநாள் கண்விழிச்சதும் பவானிக்கு என்ன ஆச்சின்னு தெரிஞ்சிக்க போனேன், பவானியோட இறுதி சடங்குல நான் கலந்துக்கிட்டேன், அப்பதான் தருண் என்னை முதல் முதல்ல பார்த்தது. பவானியை இழந்த துக்கத்தில கலங்கிகிடந்தாரு, அவரை தேர்த்தகூட யாரும் இல்லை, எனக்கு மனசு கேட்கலை, அவருக்கு ஆறுதலா 2 வார்த்தைகள் பேசிட்டு அங்கிருந்து போயிட்டேன் மறுபடியும் அவரை நான் என்னோட கம்பெனியில பார்த்தேன் அதுவும் 3 மாசம் கழிச்சி….

  

தருண் ஹரிணி வேலை செய்யும் ஐடி நிறுவனத்திற்கு எதேச்சையாக இன்டர்வியூக்காக வந்திருந்தான், அவனை இன்டர்வியூ செய்ததே ஹரிணிதான். அவனைக் கண்டதும் மென்மையாக புன்னகைத்தாள் தருணிற்கும் 3 மாதங்கள் கடந்தும் ஹரிணியை நன்றாக தெரிந்திருந்தது, அவனும் பதில் புன்னகை பூத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.