பார்க்கறப்ப வேணா நாம நட்பா பழகலாம், இங்க எனக்கு எல்லாருமே ஒண்ணுதான், ஒருத்தரை சப்போர்ட் பண்ணி இன்னொருத்தரை பகைச்சிக்க முடியாது, நீங்க ஹெச் ஆரா இருந்ததால நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியும்னு நம்பறேன்“
”நல்லாவே புரியுது மேம்”
”சவுண்ட்ஸ் குட், பை” என சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குச் சென்றாள்.
தருணுக்கென புது ப்ராஜெக்ட் அவனிடம் வேலை செய்ய நான்கு ஆட்கள் என அனைத்தையும் ஏற்பாடு செய்தாள். தருணும் தன் டீம் மெம்பர்களுடன் இணைந்து வேலையில் இறங்கினான்.
மற்றவர்களுக்கு என பல பல விசயங்கள் இருந்தது, வீட்டிற்கு செல்வது, லவ்வரிடம் பேசுவது, கதையளப்பது, பொழுது போக்க சினிமா, பார்க், பீச் என அங்கு இங்கு அலைவது என காரணங்கள் இருந்தது, அதற்காக அவர்கள் தங்கள் வேலை நேரம் முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள் ஆனால் தருண் அப்படியில்லை, முடிந்தவரை அவன் கம்பெனியில் வேலை செய்தான், சில நேரங்களில் வீட்டிற்கு கூட செல்லாமல் கம்பெனியே கதியே என கிடந்தான், அவனது சின்சியாரிட்டியை அனைவரும் பாராட்டினார்கள், சிலர் பொறாமையும் அடைந்தார்கள். ஒரு மாதம் முடிவதற்குள்ளேயே புது ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்து ஹரிணியின் முன் நின்றான் தருண்.
அவனது ப்ராஜெக்ட்டை கண்டு வியந்தாள் ஹரிணி
”குட் ஜாப் தருண்”
”தாங்க்ஸ் மேம்”
”இன்னும் டைம் இருக்கு, நாள் இருக்கு, இப்படி அவசர அவசரமா இந்த ப்ராஜெக்டை முடிக்கனுமா, யாராவது உங்களுக்கு நெருக்கடி தந்தாங்களா என்ன”
”அதெல்லாம் இல்லை என்னால என் மனைவியை மறக்க முடியலை, முடிஞ்சவரைக்கும்