”ஆனா வந்து” என அவன் தடுமாற
”ஊப்ஸ் சாரி நான் ஜஸ்ட் டின்னர்க்குதான் கூப்பிட்டேன், இந்த ஓட்டல்ல உட்கார்ந்து டின்னர் சாப்பிடறது எனக்கு பிடிக்காது, எனக்கு நல்லா சமைக்க வரும், என்னை நம்பி வாங்க, உங்களுக்கு ஸ்பெஷல் டின்னர் செய்து வைக்கிறேன் ப்ராமிஸ்”
”ஓ நோ நோ அப்படியெல்லாம் இல்லை, எதுக்கு ப்ராமிஸ்லாம், நான் வரேன் எத்தனை மணிக்கு”
”ஒரு 8 மணிக்கு வாங்க நாளைக்கு சன்டே லீவுதானே, டின்னர் முடிஞ்சி லேட்டானாலும் உங்களுக்கு ப்ராப்ளம் இருக்காது, உங்க வீட்ல தகவல் சொல்லிடுங்க“
”வீட்லயா”
”ஏன் தயங்கறீங்க ஒண்ணும் பிரச்சனையில்லை நாம என்ன தப்பா செய்யப் போறோம், ஜஸ்ட் டின்னர் அவ்ளோதானே”
”இல்லை இதுக்கு முன்னாடி நான் வீட்ல தகவல் எல்லாம் சொன்னதில்லை”
”சரி உங்க விருப்பம், டின்னர்ல மீட் பண்ணலாம், என்னோட ப்ளாட் அட்ரஸ் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்”
”ஓகே பை” என தருண் சொல்லிவிட்டு சென்றதும் ஹரிணி அந்த புது ப்ராஜெக்ட்டை பார்க்கலானாள்.
அன்றைய இரவு 8 மணிக்கு தருண் ஹரிணியின் ப்ளாட் முன் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தான். காலிங் பெல் அடிக்கும் இடத்தில் ஹரிணி இளங்கோ என ஒரு பெயர் பலகை இருக்கவும் சலனப்பட்டான் தருண். ஆனாலும் யோசனையுடனே காலிங்பெல் அடிக்க சில நொடிகள் கழித்து கதவு திறக்கப்பட்டது, மறுபுறம் அழகான வெள்ளை வண்ண பூக்கள் கொண்ட சிவப்பு நிற புடவையில் இருந்தாள் ஹரிணி. அவளைக் கண்டதும் தருணின் மனம்