”ஹெச் ஆரா இருந்தேன்”
”ஓ ஐ அம் சாரி நீங்க இப்ப இன்டர்வியூ வந்தது எதுக்குன்னு தெரியுமா டீம் லீடர்க்காகத்தான்”
”தெரியும் ஆரம்பத்தில நான் ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன், அங்க நான் வெறும் ஒரு ஸ்டாப்தான் அப்புறம் அந்த வேலையை விட்டுட்டு இன்னொரு கம்பெனிக்கு போனேன், அங்க கஷ்டப்பட்டு வேலை பார்த்து ஹெச் ஆரா ஆனேன், இப்ப அதையும் விட்டுட்டு இங்க வந்துட்டேன், எனக்கு எந்த வேலைன்னாலும் ஓகேதான் ஒரு பிரச்சனையும் இல்லை”
”ஏற்கனவே ஹெச்ஆரா வேலை பார்த்திருக்கீங்க, அதனால உங்களுக்கு வேலை ரொம்ப கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன், எனிவே வெல்கம் இங்க உங்களுக்கு டீம் தரோம், நீங்க டீம் லீடரா இருந்து வேலை பாருங்க, உங்களோட திறமையை வைச்சி முடிவு செய்றேன்”
”ஓகே தாங்ஸ் ஆமா நீங்க எப்படி ஹெச் ஆரா”
”ஏன் இருக்க கூடாதா“
”அப்படியில்லை ஒரு பொண்ணு ஹெச்ஆரா ஆகறது அவ்ளோ சுலபமில்லை, நிறைய போட்டிகள் பொறாமைகள் இருந்திருக்குமே”
”ம் நிறையவே இருந்தது ஆனா, என்கிட்ட தனித்திறமை இருந்தது”
”என்ன அது“
”உழைப்பு” என்றாள் கர்வமாக அதைக் கேட்டு மென்மையாக சிரித்த தருணோ
”நைஸ் உங்ககிட்ட பேசறப்ப எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு“