சொல்றியா”
”அவர் பேரு தருண், அவரையும் நான் ரயில் பயணத்திலதான் சந்திச்சேன், நான் பார்க்கறப்ப அவருகூட ஒரு பொண்ணு இருந்தா அவங்க அவரோட மனைவின்னு கொஞ்ச நாள்ல கண்டுபிடிச்சிட்டேன், அவங்களுக்கு என்னை தெரியாது ஆனா, எனக்கு அவங்களை பார்க்கறப்ப ஒரு ஆறுதலா இருக்கும். நானும் இளங்கோவும் எப்படி கணவன் மனைவியா இருந்த நினைவுகள் என் மனசுக்குள்ள வரும், அந்த நினைவுகளே எனக்கு ஆறுதலா இருந்தது. தருண் அவனோட மனைவி பவானி ரெண்டு பேருமே ஐடியில வேலை செய்றவங்கதான், பவானியை கல்யாணம் செய்துக்கறதுக்கு முன்னாடி தருணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தது” என சொல்ல மதியழகிக்கு அலுப்பே வந்தது.
வக்கீலோ நொந்துப் போனார்
”என்னம்மா நீ என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்க, நேரா விசயத்துக்கு வராம” என ஏதோ பேச வர ஜட்ஜ் கோபம் கொண்டு
”யாரும் பேசக்கூடாது ஹரிணி என்ன சொல்றாங்களோ சொல்லட்டும், அமைதியா இருக்கறதா இருந்தா இருங்க இல்லைன்னா கிளம்புங்க”
”இல்லை யுவர்ஆனர் அந்த பொண்ணாலதான் தருண் இறந்திருப்பார்ன்னு தருணோட அப்பா அம்மா உறுதியா சொல்றாங்க”
”அவங்களை கூப்பிடுங்க விசாரிக்கலாம்” என சொல்ல வக்கீல் உடனே தருணின் பெற்றோரை ஜட்ஜம்மா முன் நிப்பாட்டினார். ஜட்ஜம்மா
”சொல்லுங்க உங்க கருத்து என்ன” என கேட்க தருணின் தாயோ
”என் பையன் பாவம், அப்பாவி, அவனே ரொம்ப வேதனையில இருந்தான், அவனோட கவலையை சாதகமாக்கிக்கிட்டு இதோ இங்க நிக்கறாளே இவள்தான் பேசி பேசியே தருணோட வாழ்க்கையில நுழைஞ்சா, எங்களுக்கு இவளைப் பிடிக்காது, நாங்க வேணாம்னு சொன்னோம் ஆனா, அவன் கேட்கலை இப்ப இவளால அவன் செத்தே போயிட்டான், படுபாவி, அவனுக்கு