தரமுடியாது“
”சாரி மேடம் நான் அந்த அர்த்தத்தில சொல்லலை“
”போதும்” என ஜட்ஜம்மா சொன்னதும் மதியழகி அமைதியாகிவிட்டாள்
”போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொண்டு வாங்க” என சொல்ல மதியழகி கான்ஸ்டபிள் பெண்ணிடம்
”ஆஸ்பிட்டல் போய் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிட்டு வா சீக்கிரம்” என கட்டளையிட கான்ஸ்டபிள் பெண்ணும் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றாள்.
ஜட்ஜோ மதியழகியிடம்
”இந்த பொண்ணு சார்பா வக்கீல் யாரும் இல்லையா” என கேட்க அதற்கு
”இல்லை அவளை தேடி யாரும் வரலை”
”மீடியாக்கு சொல்லிட்டீங்களா”
”சொல்லியாச்சி மேடம்”
”என்னன்னு சொன்னீங்க”
”அது வந்து ஜடியில் பணிபுரியும் பெண் தன் கணவரையே ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தாள்னு”
”இன்னும் என்ன பிரச்சனை யார் மேல தப்புன்னே தெரியலை, அதுக்குள்ள நீங்களே விசயத்தை சொல்றதா”
”சாரி மேடம்“