(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”தலைவலியா போச்சி உங்களால, எல்லாமே நீங்களே செய்றீங்கன்னா நான் எதுக்கு இங்க, எதுக்காக இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீங்க, அப்படியே அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு போய் ஜெயில்ல தள்ள வேண்டியதுதானே” என ஜட்ஜ் கோபத்தில் வெடிக்க மதியழகிக்கு அவமானமாகிப் போனது, தலையை தாழ்த்தினாள். அதைக்கண்ட ஜட்ஜம்மா ஹரிணியிடம்

  

”உனக்காக வாதாட வக்கீல் யாரையும் நீ வைக்கலையா” என கேட்க அவளோ நிதானமாகப் பேசினாள்

  

”இல்லைம்மா”

  

”ஏன் வசதியில்லையா நான் வேணா வக்கீலை ஏற்பாடு செய்யவா”

  

”வேணாம்மா எனக்கு அதெல்லாம் தேவையில்லை, நான்தான் என் புருஷனை கொன்னேன் எனக்கு தண்டனை கொடுங்க” என்றாள் அவளின் முகத்தில் இருந்த அமைதி, நிதானமான பேச்சு அவருக்கு சந்தேகத்தை அளித்தது

  

”இதப்பாரு தப்பு செய்தாதான் தண்டனை தரமுடியும், நீதான் உன் கணவனை தள்ளிவிட்டேங்கறதுக்கு சாட்சியோ ஆதாரமோ இல்லை, நீ சொன்னதை வைச்சி எல்லாம் என்னால தீர்ப்பு எழுத முடியாது, முதல்ல எதுக்காக உன் கணவனை நீ கொலை செய்த, என்ன காரணம் அதைச் சொல்லு” என சொல்ல ஹரிணியோ அவரையே நேருக்குநேராக பார்த்துப் பேசினாள்

  

”எனக்கு ரயில்ல பயணம் செய்றதுன்னா ரொம்ப பிடிக்கும், எவ்ளோ பிடிக்கும்னா என்கிட்ட ஸ்கூட்டி கார் இருந்தும் ரயில்லதான் நான் வேலைக்குப் போவேன், வருவேன், சென்னையில நான் பயணம் செய்யாத ரயிலே இல்லை, எனக்கு தோழியே ரயில்தான்” என அவளாக புன்னகையுடன் பேச பேச வக்கீலோ குறுக்கே நுழைந்தார்

  

”இதப்பாரும்மா வழக்கு பத்தின கேள்விக்கு பதில் சொல்லாம நீ பாட்டுக்கு ரயில் பத்தி பேசி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.