(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

ஹரிணியோ அந்த நீதிமன்ற வளாகத்தையே சுற்றி முற்றிப் பார்த்தாள், முதல் முறை வந்திருப்பதால் அனைத்துமே ஆச்சர்யமாக இருந்தது, ஆசையாக அவள் வேடிக்கைப் பார்த்தபடியே இருக்க நடுத்தர வயது பெண்மணியும் அவளின் கணவரும் அவளை கோபத்துடன் அணுகினார்கள்

  

”ஏய் நீயெல்லாம் ஒரு பொண்ணாடி பாவம் என் பையனை அநியாயமா கொன்னுட்டியே மனுஷியா நீ சீ” என திட்ட ஹரிணி அவர்களை பார்த்து பரிதாபமே கொண்டாள். மதியழகியோ வந்தவர்களை அதட்டி அடக்கி அங்கிருந்து அப்புறப்படுத்த கான்ஸ்டபிள் வந்தாள்

  

”மேடம் ஜட்ஜம்மா வந்துட்டாங்க” என சொல்ல மதியழகியும் கையோடு ஹரணியை இழுத்துக் கொண்டு சென்றார்.

  

நீதிமன்றத்திற்குள் பல்வேறு வழக்குகள் இருந்தாலும் ஹரிணியின் வழக்கு இரண்டாவதாக வந்தது. முதல் வழக்கிற்கு தீர்ப்பு சொல்லி முடித்த ஜட்ஜம்மா அடுத்த வழக்கிற்காக அழைப்பு விடுக்க மதியழகி ஹரிணியை அழைத்துக் கொண்டு ஜட்ஜ் முன் நிப்பாட்டிவிட்டு ஒதுங்கி நின்றாள்.

  

உடனே வக்கீல் ஒருவர் ஜட்ஜிற்கு மரியாதை தந்துவிட்டு பணிவுடன் பேசினார்

  

”கட்டின புருஷனை இந்த பொண்ணு கொன்னுட்டா அதுதான் வழக்கு” என சொல்ல ஜட்ஜோ நொந்துப் போனார்

  

”ப்ச் எப்ப பாரு இதே கேஸ்தானா, புருஷன் பொண்டாட்டியை கொல்றது, பொண்டாட்டி புருஷனை கொல்றது இதே வழக்கமா நடக்குது” என அலுத்துக் கொண்டவர் வக்கீலிடம்

  

”இதுவும் வழக்கம் போல கொலை கேசுதானா இல்லை இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கா” என கேட்க அதற்கு வக்கீலோ

  

”வில்லங்கம் இருக்கு யுவர் ஆனர்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.