ஏறிக் கொண்டதும் வண்டி நகர்ந்தது.
நீதிமன்ற வளாகம் நோக்கி வண்டி செல்ல ஹரிணியோ கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்தாள். அதைக்கண்ட மதியழகி
”என்னடி எப்படி எஸ்கேப் ஆகறதுன்னு பார்க்கறியா” என கேட்க அதற்கு ஹரிணியோ
”நான் எங்கயும் ஓடமாட்டேன் மேடம்” என்றாள் அமைதியாக
”எதுக்குடி உன் புருஷனை கொன்ன” என கேட்க அதற்கு அவளோ இளப்பமாக சிரித்தாள் அவளின் சிரிப்பை காணும் போதெல்லாம் மதியழகிக்கு கோபம் தலைக்கேறியது. அடிக்க கைஓங்க வர கான்ஸ்டபிள் தடுத்தாள்
”மேடம் வேணாம் மேடம் வெளியிடத்தில வந்திருக்கோம், எவனாவது வீடியோ பிடிக்கப் போறான் வேணாம் மேடம்” என சொல்ல மதியழகி அமைதியானாள்.
ஹரிணியோ மீண்டும் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்தாள், அவள் பிறந்து வளர்ந்து பழகிய சென்னை, அவளுக்கு சென்னை மிகவும் பிடிக்கும், அவள் அதிகமாக சென்று வந்த இடங்களை ஆசையாகப் பார்த்தாள், அதைக் கண்ட மதியழகியோ
”ஆசை தீர நல்லா பார்த்துக்க, உனக்கு தண்டனை கிடைச்ச பின்னாடி எத்தனை வருஷம் நீ ஜெயில்ல இருப்பியோ, தண்டனை முடிஞ்சி நீ வெளிய வந்தா இந்த ஊரே மாறியிருக்கும், இப்பவே எல்லாத்தையும் பார்த்து சந்தோஷப்பட்டுக்க” என பேச அதற்கும் ஹரிணியிடம் சின்ன சிரிப்புதான் பதிலாக வந்ததே தவிர கோபமோ அழுகையோ அதிர்ச்சியோ என எந்தவித சலனமும் ஏற்படவில்லை. அதுவே மதியழகிக்கு கோபத்தை அதிகரிக்க வைத்தது
சிறிது நேரத்தில் நீதிமன்றம் வரவும் வண்டி ஓரிடமாக சென்று நின்றது. அதில் இருந்து அனைவரும் இறங்கினார்கள். மதியழகியோ கான்ஸ்டபிளிடம்
”போய் ஜட்ஜ் வந்துட்டாங்களான்னு பாரு” என சொல்ல அந்த கான்ஸ்டபிள் பெண்ணும் ஜட்ஜ் இருக்கிறாரா என பார்க்க சென்றாள்.