பொங்கறீங்க ரிலாக்ஸா இருங்க” என சொல்ல மதியழகி சற்று அமைதியானாள்.
ஜட்ஜம்மாவோ வக்கீலிடம்
”கொலைக்கான மோட்டீவ் என்ன” என கேட்க அதற்கு வக்கீலோ
”வேற என்ன மேடம் இருக்கும் கணவன் மனைவிக்குள்ள தகராறு வந்திருக்கும், ஐடி நிறுவனத்தில வேலை செய்றாங்க, ஏடாகூடமா ஏதாவது தப்பு செய்திருக்கலாம் அதை அவங்க புருஷன் கண்டிச்சிருக்கலாம், அதை பொறுக்க முடியாம கூட அவரை தள்ளிவிட்டு கொன்னிருக்கலாம்”
”எல்லாமே உங்களோட கணிப்பா இல்லை இதுதான் உண்மையா”
”அது வந்து”
”முதல்ல இது கொலைதானா இல்லை தற்கொலையா”
”கொலைதான் யுவர் ஆனர்”
”எதை வைச்சி சொல்றீங்க”
”அந்த பொண்ணே அப்படித்தான் சொல்லி சரண்டர் ஆனாங்க”
”இந்த பொண்ணுதான் அவளோட கணவரை தள்ளிவிட்டதுக்கு வேற ஏதாவது ஆதாரம் இருக்கா, யாராவது பார்த்தாங்களா, சாட்சி இருக்கா” என ஜட்ஜ் கேட்க மதியழகியோ
”இல்லை அப்படி ஏதும் இல்லை”
”ஆதாரம் இல்லை சாட்சியில்லை எதை வைச்சி இவங்களை நீங்க கைது செய்தீங்க”