”நினைச்சேன் எந்த கேஸ்லதான் வில்லங்கம் இல்லாம இருக்கு சரி சொல்லுங்க என்னாச்சி எதுக்காக கொலை நடந்தது” என கேட்க அதற்கு வக்கீலோ
”யுவர் ஆனர் இதோ இங்க நிக்கறாங்களே இவங்க பேரு ஹரிணி, ஐடி நிறுவனத்தில ஹெச் ஆரா வேலை செய்றாங்க, அங்கயே வேலை செய்த தருண்ங்கறவரை 6 மாசம் முன்னாடி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிட்டாங்க, அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியலை, நேத்து சாயங்காலம் ரயில்ல பயணம் செய்துக்கிட்டு இருக்கறப்ப ஓடிக்கிட்டிருக்கற ரெயில்னு நல்லா தெரிஞ்சே இந்த பொண்ணு தன் கணவனை பிடிச்சி தள்ளிவிட்டிருக்கா, இதனால அவளோட கணவன் ரயில்ல அடிப்பட்டு அந்த இடத்திலேயே இறந்துப் போயிருக்காரு”
”இவங்களை யார் கைது செய்தது” என ஜட்ஜ் கேட்க மதியழகி முன் வந்தாள்
”நான்தான் மேடம் என் பேரு மதியழகி”
”நீங்களே இந்த பொண்ணை தேடி அலைஞ்சி கைது செய்தீங்களா”
”இல்லை மேடம் அந்த பொண்ணே எங்க ஸ்டேஷனுக்கு வந்து சரண்டர் ஆனா”
”சரண்டரா ஏன்”
”பயந்திருப்பா மேடம்” என சொல்ல ஜட்ஜம்மா ஹரிணியை பார்த்தார், அவளிடம் எந்த பயமும் இல்லை முகம் தெளிவாக இருந்தது. அதைக் கண்ட ஜட்ஜோ மதியழகியிடம்
”மதியழகி அவங்களை பாருங்களேன், பயப்படற மாதிரியே தெரியலையே”
”அவளுக்கு ரொம்ப நெஞ்சழுத்தம் மேடம், புருஷனை திட்டம் போட்டு கொன்னுட்டு எப்படி அப்பாவி போல நடிக்கறா பாருங்க மேடம்”
”அவங்க நடிக்கறாங்களா இல்லையாங்கறது அப்புறம், நீங்க எதுக்காக இப்படி கோபத்துல