”எனக்குன்னு யாரும் இல்லை ஆனா இளங்கோவுக்கு அப்பா அம்மான்னு ஏகப்பட்ட உறவுகள் இருந்தது, அவங்க யாருக்கும் என்னை பிடிக்கலை, எங்க காதலை எதிர்த்தாங்க ஆனா, காதல்தான் முக்கியம்னு இளங்கோ தன் வீட்டை விட்டு வெளியே வந்து என் கையை பிடிச்சாரு, அப்புறம் நானும் அவரும் கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்தோம் யார் கண்ணு பட்டதோ கல்யாணம் ஆகி ஒரு வருஷம் முடியறதுக்குள்ளேயே ஒரு சாலை விபத்துல இளங்கோ இளங்கோ” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் விக்கி விக்கி அழுதாள் ஹரிணி.
அவளின் அழுகையைக் கண்ட வக்கீலோ
”எதுக்கு இப்ப அழறீங்க அந்த இளங்கோவை கொன்னதும் நீங்கதானா” என சொல்ல ஹரிணி திடுக்கிட்டாள்
”இல்லை அது ஒரு விபத்து, அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, அந்த விபத்து நடக்கறப்ப நான் வேலை விசயமா லண்டன் போயிருந்தேன், விபத்து விசயம் கேள்விப்பட்டதும் உடனே என்னால வந்து பார்க்க முடியலை, எப்படியோ விளக்கம் சொல்லி அவசர அவசரமா வந்து பார்க்கறதுக்குள்ள, இளங்கோவோட உடலை அவங்க அப்பா அம்மா வாங்கிட்டாங்க சரி அங்க போய் பார்க்கலாம்னு போனா அதுக்குள்ள தகனம் செய்துட்டாங்க, என்னால இளங்கோவோட முகத்தை கடைசியா கூட பார்க்க முடியலை” என சொல்லி அழத் தொடங்கினாள் ஹரிணி.
அவளின் அழுகையைக் கண்டு கோபம் கொண்ட மதியழகியோ அவளை அதட்ட வர ஜட்ஜம்மா சைகை செய்து தடுத்தார் ஹரிணி, அழுது ஓயட்டும் என பொறுமையாக காத்திருந்தார். சில நிமிடங்கள் கரைந்தது அழுது ஓய்ந்தாள் ஹரிணி, அவளுக்காக தண்ணீர் வரவழைத்திருந்தார் ஜட்ஜம்மா அந்த தண்ணீரை வாங்கி மடமடவென குடித்து தன் தாகத்தை தீர்த்துக் கொண்டு ஜட்ஜம்மாவிற்கு நன்றி கூறினாள்
”அப்புறம் என்னாச்சி” என கேட்க அதற்கு ஹரிணியோ
”இளங்கோவோட மரணம் என்னை ரொம்பவே பாதிச்சது, என்னால நிம்மதியா இருக்க முடியலை, வேலை செய்ய முடியலை, வாழவே பிடிக்கலை, வேலைக்குப் போகாம வீட்லயே