(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

ஆறுதலா இருப்பாள்ன்னு பார்த்தா அவனுக்கு எமனா வாச்சா, அநியாயமா அவனை கொன்னுட்டாளே” என கதறி கதறி அழ தருணின் தந்தையோ

  

”தருணுக்கும் இவளுக்கும் கல்யாணம் ஆன பின்னாடி எங்க வீட்டுக்கு வரலை, அவளோட ப்ளாட்லயே ரெண்டு பேரும் வாழ ஆரம்பிச்சாங்க, ஒரு நாளும் தருண் நிம்மதியா இருந்ததில்லை, சந்தோஷமாவும் இல்லை, எதையோ பறிக்கொடுத்தவனைப் போலவே இருப்பானாம், எப்ப பாரு புலம்பிக்கிட்டே இருப்பானாம், இவங்க ரெண்டு பேருக்கு நடுவில எப்ப பாரு சண்டை சச்சரவு வருமாம்”

  

”இதை யார் உங்ககிட்ட சொன்னது உங்க மகனா”

  

”இல்லை அந்த அபார்ட்மெண்ட்ல இருக்கறவங்க சொன்னாங்க”

  

”ஆக நீங்களா பார்க்கலை உங்க மகனும் சொல்லலை அப்படித்தானே”

  

”அது வந்து அவன் சொல்லலைன்னா ஏற்கனவே 2 கல்யாணம் செய்து வாழ்க்கையில நிம்மதியிழந்து இருந்தான், இந்த கல்யாணத்தால தனக்கு நிம்மதியில்லைன்னு சொன்னா நாங்க வருத்தப்படுவோம்னு நினைச்சி உண்மைகளை மறைச்சிட்டான். அவன் வெள்ளந்தியானவன், அப்பாவி அவனோட அப்பாவி தனத்தை வைச்சே இவள் எங்களை சேரவிடலை, தனியா ரெண்டு பேரும் வாழ்ந்தாங்க கல்யாணம் ஆன பின்னாடியும் இவங்க ஒண்ணா வாழலை, தனித்தனியாதான் அந்த பிளாட்ல வாழ்ந்தாங்களாம்“

  

”இதை யாரு உங்களுக்குச் சொன்னது”

  

”தருணோட கூட வேலை செய்றங்க சொன்னாங்க”

  

”ஓ தன் வாழ்க்கையை பத்தி தருண் உங்ககிட்ட சொல்லாம கூட வேலை செய்தவங்ககிட்ட சொல்லியிருக்காரு, அதை அப்படியே நீங்க நம்பிட்டீங்க”

  

”ஆமாம் இதுல சந்தேகப்பட என்ன இருக்கு, இவள் ஒரு சைக்கோ, வேணும்னே என் மகனை கல்யாணம் செய்து அவனோட வாழாம, அவனை டார்ச்சர் செய்து கடைசியில அவனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.