(Reading time: 30 - 59 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

நான் வேலை பார்த்துட்டு வீட்டுக்கு போனா வேலை செய்த களைப்பில எனக்கு தூக்கம் வருது, இல்லைன்னா அவளை நினைச்சிக்கிட்டே எனக்கு தூக்கம் வராம போகுது, ப்ராஜெக்ட் முடிக்கறதுக்காக நான் பாடுபடலை, நான் நிம்மதியா தூங்கனும்னுதான் இவ்ளோ வேலை பார்த்தேன்“

  

”ஐ திங் நீங்க ஒரு டாக்டரை போய் பார்க்கலாமே”

  

”எனக்கு பைத்தியம் பிடிக்கலை மேம்”

  

”சே சே நான் அப்படி சொல்லவரலை, இப்படியே நீங்க உங்க மனைவியை நினைச்சிக்கிட்டு வெறுப்பா வாழறதுக்கு ஒரு டாக்டரை பார்த்து பேசினா பெட்டர் பீலிங் கிடைக்கும்லயா”

  

”என்னோட பிரச்சனையை ஒரு டாக்டரால நிவர்த்தி செய்ய முடியாது, என்னோட பிரச்சனை போலவே பாதிக்கப்பட்டவங்களுக்குத்தான் புரியும்”

  

”ஓகே புரியுது, ம்ம்ம் நைட் டின்னர் மீட் பண்ணலாமா” என சட்டென கேட்டுவிட்டாள் ஹரிணி அதைக்கேட்டு தருண் ஒரு நொடிதான் திடுக்கிட்டான் மறுநொடியே

  

”சரி” என்றான் அதில் அவளும் புன்னகையுடன்

  

”உங்களுக்கு விருப்பம் இருந்தாலே டின்னர் ப்ளான் பண்றேன், வேலைக்கு ஆபத்து வரும்னு நினைச்சி எல்லாம் என்கூட டின்னருக்கு நீங்க வரவேணாம்”

  

”இல்லை அப்படியில்லை எனக்கு இதுல விருப்பம்தான்”

  

”ஓகே அப்போ நைட் மீட் பண்ணலாம்”

  

”எங்க வரனும் எந்த ஓட்டல்”

  

”என்னோட ப்ளாட்டுக்கு வரனும்”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.