காதல் சின்னம் எப்படியிருக்கு தருண் வீடு நல்லாயிருக்கா” என கேட்க தருணும் சுற்றி முற்றி பார்த்தான், அருமையாக இருக்கவே அவன் புன்னகையுடன்
”ஆமாம் சூப்பரா இருக்கு”
”சரி வாங்க டின்னர் சாப்பிடலாம்“
”ஒரு நிமிஷம் ஹரிணி இந்தா இந்த பொக்கே உனக்காக கொண்டு வந்தேன்“
என சொல்ல அந்த பூங்கொத்தை கண்டதும் ஹரிணின் கண்கள் கலங்கியது
”ஏய் என்னாச்சி ஹரிணி, எதுக்கு அழற உனக்கு இது பிடிக்கலைன்னா வேணாம்”
”நோ நோ அப்படியில்லை, இளங்கோதான் இதுபோல பூங்கொத்து தந்து என்னை சந்தோஷப்படுத்துவான், இப்ப இதை பார்த்ததும் எனக்கு இளங்கோ ஞாபகம் வந்துடுச்சி அதான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் சாரி தருண்”
”பரவாயில்லை ஹரிணி“ என சொல்ல ஹரிணி ஆசையாக அந்த பூங்கொத்தை வாங்கி முகம் மலர அதையே பார்க்க அவளையே ஆர்வமாக பார்த்தான் தருண். பூங்கொத்தை ஓரிடமாக வைத்துவிட்டு டைனிங் ஹாலுக்குச் சென்றாள். அவள் பின்னாலேயே தருணும் சென்றான். இருவரும் அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள், விதவிதமாக சமைத்திருந்தாள் ஹரிணி, அதைக்கண்டு பரவசப்பட்டான் தருண், அவளே அவனுக்கும் அவளுக்குமாக பரிமாறினாள், இருவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள், எதைப்பற்றியும் பேசவில்லை, ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டு மென்மையாகச் சிரித்துக் கொண்டு என சாப்பிட்டு முடித்தார்கள்.
சாப்பிட்ட களைப்பு நீங்க டிவியில் படம் ஒன்றை ஓடவிட்டாள், காதலுக்கு மரியாதை படம் ஓட அதை இருவருமே ரசித்து பார்த்தார்கள், படம் முடிந்ததும் தருணிடம் ஹரிணி பேசினாள்
”இந்த நாளை என்னால மறக்க முடியாது தருண், இளங்கோ இருந்தப்ப எப்படியோ அதே உணர்வு இப்ப வந்திருக்கு, இளங்கோவோட இப்படி டின்னர் சாப்பிட்டு படம் பார்த்து என்ஜாய்