தேடப்போறீங்களா, அதுசரி இந்த மொத்த சொத்தும் யார் பேர்ல இருக்குன்னு தெரிஞ்சிக்கனும் அதானே”
”இல்லை என் அப்பா மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கறேன்“
”கண்டுபிடிச்சி என்ன செய்வீங்க, செத்தவர் என்ன உயிரோடவா வரப்போறாரு“
”ஆனா காரணத்தை தெரிஞ்சிக்கலாமே இன்னொரு மரணம் இந்த வீட்ல நடக்க கூடாது”
”இன்னொரு மரணமா யாரைச் சொல்றீங்க உங்க தாத்தாவையா பின்ன இருக்காதா பெத்த பாசம் இருக்கும்ல உங்கப்பாவை நினைச்சி நினைச்சி அவரும் ஒருநாள் போகத்தான் போறாரு” என சொல்ல அவனோ கோபம் கொண்டான்
”நாச்சியா வார்த்தை முக்கியம், அமைதியா இரு, என்னை கோபப்படுத்தி பார்க்காத, என் தாத்தாவை பத்தி உனக்கென்ன தெரியும்”
”எனக்குதான் நல்லாவே தெரியும் எனக்கு மட்டுமில்லை எங்க கீழ வீதி ஆளுங்க எல்லாருக்கும் அவரை பத்தி நல்லாவே தெரியும்”
”என் தாத்தாவை ஊருக்கேதான் தெரியும்“
”நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க, எங்க கீழவீதியில ரொம்ப வயசான ஒரு தாத்தா இருக்காரு, அவர்கிட்ட நான் பேசுவேன் அப்ப ஒரு நாள் உங்க தாத்தா வண்டியில வந்துக்கிட்டு இருந்தாரு, அப்ப நான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு சைக்கிள்ல போனேன், அப்ப உங்க தாத்தா வண்டி என் மேல இடிச்சிடுச்சி, நான் விழுந்துட்டேன், அப்புறம் அவர் வந்து என்னை சத்தம் போட்டுட்டு போயிட்டாரு, அப்புறமா நான் அங்கிருந்து போகலாம்னு இருந்தப்ப நான் சொன்னேன்ல ஒரு வயசான தாத்தா, அவர் என்கிட்ட பாசமா பேசினாரு அவரு சொன்னாரு உங்க தாத்தாவைப் பத்தின ஒரு உண்மையை”
”என்ன உண்மை”