அந்த டைரியை 100 முறையாவது படித்திருப்பாள் ஆனாலும் அவளுக்கு அலுப்பு வரவில்லை மனப்பாடம் செய்யும் அளவு அந்த டைரியை படித்து முடித்த கையுடன் அதை எடுத்துக் கொண்டு பால்கனி வந்தாள்
அதை தரையில் வைத்து நெருப்பால் அதை பற்ற வைக்க அது குபுகுபுவென எரிந்தது, அந்த டைரியின் காகிதம் எரியும் போது உள்ளிருந்து நிவேதினி தருணுடன் இருக்கும் திருமண போட்டோவும் மற்றும் பவானி தருணுடன் இருக்கும் திருமண போட்டோவும் சேர்ந்தே எரிந்தது, அந்த டைரி யாருடையது என அவளுக்கு மட்டுமே தெரியும் அவளோ அந்த டைரி எரிவதை நன்றாக பார்த்து அது எரிந்து முடிந்து சாம்பலானபின்பு மென்மையாகச் சிரித்து
”உங்களுக்கு நான் நியாயம் வாங்கித்தரேன்” என சொன்னாள் அது அவள் நிவேதினிக்காக சொன்னாளா அல்லது பவானிக்காக சொன்னாளா என்னவோ ஒன்று முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் அவ்விடம் வந்து நகர்ந்து ஹாலில் இருந்த இளங்கோவின் புகைப்படம் முன் வந்து நின்றாள்
”இளங்கோ என்னை மன்னிச்சிடு நான் உனக்கு துரோகம் இழைக்க விரும்பலை, அதுக்காக உனக்கு நடந்த அநியாயத்தை அப்படியே விடமுடியாது உனக்கு நடந்தது கொலை முயற்சி ஆனா, அதை சாலை விபத்தா மாத்தி ஊரு உலகத்தை வேணா ஏமாத்தியிருக்கலாம் ஆனா, என்னையில்லை, எப்போ நான் தருணை சந்திச்சேனோ அப்பவே தெரிஞ்சிக்கிட்டேன் இளங்கோ உன்னோட மரணத்தில அந்த தருணுக்கும் முக்கிய இடம் இருக்கு, உன்னை யார் கொல்ல முயற்சி செய்தாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் தெரிஞ்சும் இத்தனை நாள் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் பவானிதான்
ஆமாம் இளங்கோ நிவேதினியை உனக்காக பேசி வைச்சாங்க ஆனா, நீ எனக்காக அவளை விடப் பார்த்த நிவேதினியை தருண் அடைய நினைச்சான், அதுக்கு குறுக்க நீ வரக்கூடாதுன்னு பார்த்தான் நல்லவேளையா நீ என்னை கல்யாணம் செய்ததால அவனுக்கு நிம்மதியாகி நிவேதினியை கல்யாணம் செய்துக்கிட்டான், பாவம் அவள்கூடவாவது உண்மையா வாழ்ந்தானா பணத்துக்காக கல்யாணம் செய்துக்கிட்டான், எப்போ அவளோட சொத்து தனக்கு கிடைக்காதுன்னு தெரிஞ்சதும், அவளை தினம் தினம் டார்ச்சர் செய்ய ஆரம்பிச்சி ஒரு கட்டத்தில அவனை காதலிச்சி கல்யாணம் செய்துக்கிட்டது பெரிய தப்புன்னு உணர்ந்து பாவம் நிவேதினி ரயில் முன்னாடி விழுந்து இறந்தா, இந்த விசயம் கூட எனக்கு பவானியோட டைரி