(Reading time: 18 - 35 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”இப்ப என்ன உனக்கு முத்தம் வேணும் அதானே“

  

”அதேதான் நீ முத்தம் தந்தாதான் மேற்கொண்டு நான் இந்த கேஸ் பார்ப்பேன்” என அடம்பிடித்த அகத்தியனை ரசித்தப்படியே மென்மையாக சிரித்துக் கொண்டு அவனை நெருங்கினாள் நாச்சியா, அவளின் அருகாமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது ஆசையாக அவளை முத்தமிட எண்ணி நெருங்கிய நேரம் க்கும் என யாரோ கனைக்கும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டார்கள் இருவரும்

  

 யாரென பார்க்க கமிஷனரே வந்திருந்தார்

  

”சே நீங்கதானா” என அகத்தியன் அலுத்துக் கொண்டு நாச்சியாவை விட்டு விலகி நின்றான். அவரோ

  

”அதான் கல்யாணம் ஆயிடுச்சில்ல, இதையெல்லாம் வீட்ல வைச்சிக்கறது கமிஷனர் ஆபிசை உன்னோட வீடா மாத்திடாத என் மானமே போயிடும் அகத்தியா” என சொல்லியவரிடம்

  

”என்னத்த வீட்டுக்கு போனாலும் இந்த கேஸ் ஃபைல்லதான் நாச்சியா ஆராய்ச்சி செய்றா, ஹனிமூன்கூட போகலை ஏதோ ஒரே ஒரு முத்தமாவது கிடைக்கும்னு பார்த்தா அதையும் கெடுத்துட்டீங்க இப்ப உங்களுக்கு சந்தோஷமா”

  

“சரி சரி எனக்குப் புரியுது என்ன செய்றது, ரொம்ப வருஷமா பென்டிங் இருக்கற ஃபைல் இது நானும் அடுத்த மாசம் வேற ஊருக்கு டிரான்ஸ்பராகிப் போறேன், போறப்ப ஒரு முடிக்காத கேஸை முடிச்சிட்ட பெருமையோட போகலாம்னு இருக்கேன்“

  

”அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா உங்களுக்கு பேர் புகழ் வேணும்னா நீங்கதான் இந்த கேஸை முடிக்கனும்”

  

”சரி சரி கோச்சிக்காத எனக்காக நீ இதை செய்யக்கூடாதா“

  

”செய்ய மாட்டேன் நான் இன்னிக்கே ஹனிமூன் போக போறேன்” என அடமாக பேசிய

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.