”அப்ப உங்க தாத்தா இந்த கேஸ் பத்தி எதுவும் சொல்லலையா சார்“ என நாச்சியா கேட்க அதற்கு கமிசனர்
“அவருக்கு தெரிஞ்சதெல்லாம் நான் இந்த கேஸ்ல எழுதியிருக்கேன் அவ்ளோதான்“
”இதை மட்டும் வைச்சிக்கிட்டு என்னத்த செய்றது சார்”
“மேற்கொண்டு அவர் எதுவும் சொல்லலை, உங்களுக்கு இந்த கேஸ் கொடுக்கறதுக்கு முன்னாடி நானே இந்த ஊருக்கு வந்த உடனே பர்சனலா இந்த கேஸ் விசயமா விசாரனை நடத்தினேன் அதுல கிடைச்ச தகவல்கள் வைச்சி என்னால பெரிசா எதையும் கண்டுபிடிக்க முடியலை, அடுத்த மாசம் நான் டிரான்ஸ்பர் ஆகிப் போறதால என் தாத்தாவோட கடைசி ஆசையை நிறைவேத்த முடியாம போயிடுமோன்னு பயப்படறேன், எனக்கும் வேற முக்கியமான வேலைகள் முடிக்க வேண்டியது இருக்கு, அதையெல்லாம் முடிக்கவே எனக்கு நேரம் போதலை, திரும்ப இந்த ஊருக்கு எனக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமான்னு தெரியலை, இதுவரைக்கும் நீங்க முடிக்க முடியாத எத்தனையோ கேஸ்களை முடிச்சி காட்டியிருக்கீங்க, உங்க மேல இருந்த நம்பிக்கையில நான் இந்த கேஸ் தந்தேன், என் தாத்தாவோட கடைசி ஆசையை நிறைவேத்த வேண்டிய கடமையில நான் இருக்கேன், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என கமிசனர் இருவரிடமும் கெஞ்ச அகத்தியன் மனம் இறங்கி வந்தான் நாச்சியாவோ
”சார் கவலைப்படாதீங்க, எனக்கும் இந்த கேஸ் ரொம்ப பிடிச்சிருக்கு, கண்டிப்பா நாங்க இந்த கேஸை முடிச்சிக் கொடுப்போம் என்னை நீங்க தாராளமா நம்பலாம் சார்” என சொல்ல திருப்தியுடன் கமிஷனர் அந்த அறையைவிட்டுச் சென்றார். அவர் சென்றதும் அகத்தியன் மீண்டும் நாச்சியாவை நெருங்கி அவளை கட்டிப்பிடிக்க அவளோ அதிர்ந்தாள்
”என்ன செய்றீங்க சார், நாம இப்ப ட்யூட்டியில இருக்கோம்“
”எனக்கு நீ முத்தம் தந்தாதான், நான் இந்த கேஸ் பார்ப்பேன்”
”ப்ச் அகத்தியா என்ன இது விடுங்க என்னை” என சிணுங்கினாள்