(Reading time: 18 - 35 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”அய்யோ சிணுங்கி சிணுங்கியே என் மனசை மயக்கற ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு முத்தம் அதுக்கு அப்புறம் நான் கேட்கமாட்டேன், இந்த கேஸ் முடிச்சதும் ஹனிமூன் போகலாம் இப்ப ஒரு முத்தம் கொடு ப்ளீஸ்” என கெஞ்ச அதில் மனம் இறங்கி அவன் கேட்டதை விட அதிக முத்தம் தந்தாள் நாச்சியா.

  

அன்றைய இரவு அகத்தியன் தன் வீட்டில் சமையல் செய்துக் கொண்டிருக்க படுக்கையறையில் நாச்சியா கேஸ் ஃபைலுடன் தனக்குதானே பேசிக் கொண்டிருந்தாள்

  

”எத்தனை கொலை நடந்திருக்கு, அந்த ஊர்ல நிறைய பேர் இறந்திருப்பாங்க, அப்படி என்னதான் நடந்திருக்கும்னு தெரியலையே ஆரம்பத்தில இருந்து பார்க்கலாம், ஆவுடையப்பனுக்கு ஒரே பொண்ணு பேரு ஆண்டாள் நாச்சியா, அவளை சங்கமேஸ்வரன்ங்கறவனுக்கு கல்யாணம் செய்து வைச்சாங்க, அவங்களுக்கு பொன்முடின்னு ஒரு பையன் அப்புறம் கலாவதின்னு ஒரு பொண்ணு ஆனா, பொன்முடி ஆண்டாள் நாச்சியாவோட மகன் இல்லை சொத்துக்காக இன்னொருத்தியோட பையனை மாத்தி வைச்சிட்டான் அந்த சங்கமேஸ்வரன், பொன்முடியோட பையன் அகத்தியன் அவனும் சொந்த பையன் இல்லை சொத்துக்காக வேலைக்காரனுக்கு பிறந்த பையனை மாத்தி வைச்சிட்டாங்க, உண்மையான குழந்தை பேரு ஆண்டாள் நாச்சியா, அவளை வேலைக்காரங்க வளர்த்திருக்காங்க, அதுவரைக்கும் அந்த ஊர் மேல வீதி கீழவீதின்னு பிரிஞ்சி கிடந்திருக்கு, அப்புறம் சங்கமேஸ்வரன் பொன்முடி இறந்த பின்னாடி அந்த ஊரை அகத்தியனும் நாச்சியாவும் சேர்ந்து ஒண்ணாக்கி அம்பேத்கார் நகர்ன்னு பெயர் வைச்சாங்க, அப்புறம் அந்த ஊருக்கு தேவையான எல்லா நல்லதையும் செய்தாங்க, அப்புறம் என்னாச்சின்னு  தெரியலை, ஒரு பெரிய கலவரம் நடந்திருக்கு, அதுல மக்களுக்குள்ள அடி தடி சண்டையில நிறைய பேர் இறந்திருக்காங்க, கலவரம் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் தங்களோட படுக்கையறையில மர்மமான முறையில இறந்துக்கிடக்கறாங்க அகத்தியனும் நாச்சியாவும், அது தற்கொலையா இல்லை யாராவது கொலை செய்தாங்களா ஒண்ணுமே புரியலையே, ஒரே குழப்பமா இருக்கு” என அவள் புலம்ப அந்நேரம் அகத்தியன் அங்கு வந்தான்

  

”டின்னர் ரெடி” என டிரேயில் அவன் சமைத்த நூடுல்ஸ் பாஸ்தா இரண்டையும் கொண்டு வந்து வைத்தான்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.