”இனிமே சுனாமி வந்து என்ன ஆக போகுது என்கிட்ட தான் ஒண்ணுமே இல்லையே”
”நெஞ்சில கை வைச்சி சொல்லுங்க ஒண்ணுமே இல்லையா இல்லை நந்தினி இல்லையா” என அவன் பொடி வைத்து கேட்க அவனுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமைதியாக அமர்ந்துவிட்டான்
”என்னடா அர்ஜூன் இது, இத்தனை நாளும் ரொம்ப சந்தோசமா இருந்தோம் ஆனா இன்னிக்கு பாரு என்னென்னவோ நடக்குது”
”அண்ணா இருந்தோம்ன்னு சொல்லுங்க அது என்ன சந்தோசமா இருந்தோம்ன்னு சொல்றது நீங்க சந்தோசமா இருந்து நான் பார்த்ததில்லையே”
”சரி இருந்தேன் போதுமா” என கத்த
”ம் போதும் ஏன் இப்படி கத்தறீங்கண்ணா, உங்க சுபாவமே அமைதியான சுபாவம் தான் ஆனா இப்ப எதுக்கு ரெண்டு பொண்ணுங்ககிட்டயும் சத்தம் போடறீங்க”
”தெரியல அர்ஜூன் எனக்குள்ள என்ன நடக்குதுன்னே புரியல”
”நான் சொல்லவா”
”வேணாம் நீ இல்லாததை இருக்கறதா சொல்லுவ”
”இல்லண்ணா இருக்கறததான் உங்களுக்கு இல்லைன்னு படுது”
”போதும் அர்ஜூன் இனிமே இதைபத்தி பேச வேணாம்”
”சரி விடுங்க வீட்ல இருந்து போன் வருது ஏதோ மீட்டிங் இருக்காம் வேலைக்கு போலாமா நேரமாகுது”