(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 06 - சசிரேகா

   

மிகுந்த சோர்வுடன் ஆபிசிற்குள் வந்தான் தருண். அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போல அவனது டீம் மெம்பர்கள் அவனை உற்சாகமாக அழைத்தார்கள்

  

”வாழ்த்துக்கள்” என அனைவரும் கோரஸாகச் சொல்ல தருணுக்கு எதுவும் விளங்கவில்லை.

  

அவனே நொந்துப் போய் இருக்க இந்த வாழ்த்துக்கள் ஏதோ அவனது ஏமாற்றத்திற்காக அனைவரும் கேலி செய்வது போல தோன்ற அனைவரையும் கோபமாக பார்த்து விட்டு தனது கேபினுக்குச் சென்றான். அவனது செயல் மற்றவர்களை குழப்பியது. அவன் தன் இருக்கையில் அமர்ந்ததும் உடனே ஹரிணியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது

  

”மிஸ்டர் தருண் என் கேபினுக்கு வாங்க” என பட்டென சொல்லிவிட்டு டக்கென போனை வைத்துவிட அவனுக்கு கோபம் தலைக்கேறியது

  

”அதிகாரத்தை பாரு வரேன்டி வரேன், வராம எங்க போய் தொலையறது” என புலம்பியபடியே அவளின் கேபினுக்குச் சென்றான். செல்லும் வழியில் அவனை பார்த்தவர்கள் வாழ்த்துக்கள் கூறி சிரிக்க அவனுக்கு அவர்களின் சிரிப்பு கேலி சிரிப்பாக தெரிய அனைவரையும் கோபத்துடன் முறைத்துவிட்டு ஹரிணியிடம் சென்றான்

  

”மே ஐ கம் இன்” என வெறுப்பாக சொல்ல அவளோ

  

”எஸ் கம் இன்” என்றாள் அதிகாரமாக, அவனோ உள்ளே செல்ல அவளுடன் எம்டியும் இருந்தார். எம்டியோ தருணை கண்டதும்

  

”வாழ்த்துக்கள் தருண்” என சொல்ல அவனுக்கு கோபம் அதிகமாகி பொங்கினான்

  

”எதுக்கு சும்மா எல்லாரும் எனக்கு வாழ்த்துக்கள் சொல்றீங்க, அப்படி நான் என்னத்த செய்துட்டேன், இருக்கற நிலைமையே மோசமாயிருக்கு, இதுல வாழ்த்து ஒண்ணுதான் குறைச்சல், என் வாழ்க்கை இப்படி வெறுப்பா இருக்கேன்னு வாழ்த்தறீங்களா இல்லை என் வாழ்க்கை ஏமாற்றத்தோட போகுதே, அதுக்கு வாழ்த்துக்கள் சொல்றீங்களா உங்களோட கேலி சிரிப்பு கிண்டலான பேச்சுக்கு நான்தான் கிடைச்சேனா ஆளை விடுங்க” என கத்த எம்டியோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.