(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”உன்னை பத்தி எல்லாரும் உயர்வா பேசறாங்க, கம்பெனியில உனக்கு நல்ல பேர் இருக்கு, அதனால உனக்கு ப்ரமோஷன் தரலாம்னு பார்த்தா அதுக்குள்ள என்னென்னவோ பேசி வைக்கற“

  

”சாரி சார் ஏதோ வீட்டு டென்ஷன்ல“

  

”இது ஆபிஸ், இங்க வீட்டை கொண்டு வராதீங்க, அதோட ஹரிணியை போல ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டு இப்படி மனசு உடைஞ்சிப் பேசறீங்கன்னா என்னால சத்தியமா நம்ப முடியலை, ஹரிணி ரொம்ப அன்பான பொண்ணு அவள்கூட உங்களுக்கு என்ன பிரச்சனை”

  

”அது சின்ன ப்ராப்ளம்தான் சார், நாங்களே அதை சால்வ் பண்ணிடறோம்“

  

”எனிவே உன் குடும்ப பிரச்சனை எனக்கெதுக்கு, ஹரிணிகிட்ட கேட்டிருந்தேன் தகுதியான நேர்மையான ஆளை காட்டுன்னு, உன் பேரைச் சொன்னா”

  

”என் பேரா எதுக்கு சார்“

  

”உன்னை ஹெச் ஆரா ஆக்கலாம்னுதான்“

  

”நான் ஹெச் ஆரா ஆனா ஹரிணி இருக்கறப்ப நான் எப்படி”

  

”லிசன் எனக்கு ஏகப்பட்ட ப்ரான்ச் இருக்கு, அது உனக்கேத் தெரியும் லண்டன்ல வேற எனக்கு பிசினஸ் இருக்கு, இங்க இருந்துக்கிட்டு அங்க என்னால எதுவும் செய்ய முடியலை அதனால நான் அங்க போகப் போறேன், என்னோட பொறுப்புகளை பார்த்துக்கற இடத்துக்கு ஹரிணி வர்றா, அவளை நான் ஜெஎம்டியா ஆக்கப் போறேன் அடிக்கடி இங்க வந்து போவேன், மீதியெல்லாம் அவள் பார்த்துக்குவா, அவள் இடத்துக்கு ஆளை பார்க்க சொன்னேன், அவள் சட்டுன்னு உன் பேரைச் சொன்னா”

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.