”ஹரிணி ஏன் இப்படி பேசற, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு, ஏதோ நான் கோபத்துல பேசிட்டேன் அதுக்காக இப்படியா வேணாம் ஹரிணி“
”வேணாம்னுதான் நானும் அப்பவே சொன்னேன், என்னவோ இளங்கோவை போல இருப்பேன்னு சொன்னீங்களே அது இதுதானா”
”சாரி சாரி சாரி” என அவன் பைத்தியம் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க அவளுக்கு கடுப்பானது
”போதும் நிப்பாட்டுங்க வெளிய போங்க” என அவனை பிடித்து தள்ள, அவனோ சட்டென அவளின் காலில் விழுந்தான், அதை அவளே எதிர்பார்க்கவில்லை
”சாரி ஹரிணி ஐ லவ் யூ” என்றான் அதைக்கேட்டு வியந்தாள் ஹரிணி
”ஐ லவ் யூவா இது என்ன புதுசா“
”நான் உன்னைக் காதலிக்கிறேன்”
”இது என்ன புது கதையை ஓட்டறீங்க”
”கதையில்லை இது நிஜம், உண்மையில நான் உன்னை காதலிச்சேன் உன்னை எனக்கு பிடிச்சிருந்தது, எப்படியாவது என் காதலை சொல்லி உன்னை கல்யாணம் செய்துக்கலாம்னு இருந்தேன் ஆனா, நமக்குள்ள கல்யாணம் ஆயிடுச்சி, அதனால என்ன என் காதல் நிஜம்தானே ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு ஹரிணி” என சொல்ல அவள் நிதானமாகி சோபாவில் அமர தருணுக்கு நிம்மதியாகிப் போனது
”உங்களுக்கு நான் எந்த குறையும் வைக்கலை ஆனாலும் நமக்கு நடந்த கல்யாணமே உங்களுக்கு பிடிக்கலைங்கறப்ப இந்த காதல் எதுக்கு”