”ஓ அப்படியா சார் இது எனக்கு தெரியாது சார்”
”நான்தான் சொல்ல வேணாம்னு சொன்னேன், முறைப்படி நானே சொல்லலாம்னு இருந்தேன், அதுக்குள்ள ஆபிஸ் முழுக்க தெரிஞ்சிடுச்சி அதனால என்ன இதோ இப்பவே சொல்லிடறேன், இனிமே நீங்க ஹெச்ஆரா இருக்கப் போறீங்க வாழ்த்துக்கள், சந்தோஷம்தானே” என சொல்ல தருணுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். அவனின் செயல்களை கோபமாகவே பார்த்தபடி இருந்தாள் ஹரிணி. அவளின் கோபத்தைக் கண்டு தனது உற்சாகத்தை குறைத்தான். எம்டியோ
”இன்னியில இருந்தே நீங்க ஹெச் ஆரா ஜாயின் பண்ணிக்கலாம்” என சொல்ல அவரிடம் கைகுலுக்கிவிட்டு நன்றிகள் பல சொல்ல அவரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றார். அவர் சென்றதும் தருண் மகிழ்ச்சியாக ஹரிணியிடம் வர அவளோ கோபத்தில் ஒரு பார்வை வீசி அவனைத் தடுத்தாள்
”ஹரிணி சாரி ஹரிணி”
”கால் மீ மேடம்” என்றாள்
”சாரி மேடம் அது ஏதோ வீட்டு டென்ஷன்ல”
”இன்னியில இருந்து நீங்க ஹெச் ஆரா வேலை பார்க்கப் போறீங்க, உங்களோட பென்டிங் வேலைகளை முடிச்சிட்டீங்களா இல்லையா“
”முடிச்சிட்டேன் மேடம் எல்லாமே முடிஞ்சிடுச்சி”
”குட் இனிமேல இந்த கேபின் உங்களோடது, நான் என்னோட கேபினுக்குப் போறேன்”
”ஓகே மேடம் புது ப்ராஜெக்ட் கொடுக்கறதா சொன்னீங்களா”