(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”சாரி அதை நான் வேறொரு டீம்க்கு தர்றதா ஜஸ்ட் இப்பதான் முடிவு எடுத்தேன்”

  

”ஓ சாரி சாரி மேடம் அது வந்து”

  

”போதும் வேற ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும், இந்த வேலையை பத்தி தெரிஞ்சிக்குங்க” என அதிகாரமாக சொல்லிவிட்டு அவள் எழுந்துக் கொள்ள அவனோ

  

”சாரி மேடம்”

  

என சொல்லியும் அவள் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தனது பொருட்கள் அடங்கிய அட்டை பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி அவளுக்கான கேபினுக்குச் சென்றாள். அவள் சென்றதும் தனது தவறை எண்ணி நொந்துக் கொண்டான் தருண். அதற்குள் அவனுடன் வேலை செய்தவர்கள் அவனிடம் வந்து வாழ்த்துக்கள் சொல்ல அவன் இம்முறை மகிழ்ச்சியாக அனைத்து வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டு நன்றி சொன்னான். மதியம் அவனது ட்ரீட் என்பதால் வேலை செய்த மற்றவர்களுக்கு பிடித்ததை வாங்கித் தந்து அசத்தினான். ஹரிணிக்காக கேக் ஒன்று கொண்டு வர அவளோ கத்தினாள்

  

”யாரை கேட்டு உள்ள வந்தீங்க, இப்ப நான் ஹெச் ஆர் கிடையாது எப்ப பாரு வந்து பார்க்கறதுக்கு, நான் இப்ப ஜெம்எடியா இருக்கேன் வர்றதுக்கு முன்னாடி முதல்ல என்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கனும் புரியுதா” என கத்த அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது

  

”சாரி மேடம் நான் வேணும்னே இப்படி பண்ணலை“

  

”இப்ப எதுக்காக இங்க வந்தீங்க”

  

”இந்த கேக் தரலாம்னு”

  

”தேவையில்லை போங்க வெளிய”

  

”இல்லை இது உங்களுக்காகத்தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.