அவனையும் ஹரிணியையும் மாறி மாறி வியப்பாக பார்த்துவிட்டு
”ஹரிணி உனக்காகதான் நான் இரங்கி வந்தேன், பாரு எப்படி பேசி வைக்கறான்னு இது தேவையா எனக்கு” என சொல்ல ஹரிணி அதிர்ந்து
”சார் சார் ப்ளீஸ் சார், ஒன்மினிட் நான் அவர்கிட்ட பேசிட்டுச் சொல்றேன், தயவு செய்து கோச்சிக்காதீங்க ப்ளீஸ் சார்” என சொல்ல எம்டியோ
”ஓகே பேசு” என சொல்லிவிட ஹரிணியோ தருணை தனியாக அந்த அறையின் ஓரமாக அழைத்துச் சென்று பேசினாள்
”தருண் எதுக்கு இப்படி பேசி வைக்கறீங்க, என்னாச்சி உங்களுக்கு”
”என்ன ஆகனும் அதான் என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சே பாரு எல்லாரும் என்னைப் பார்த்து கேலியா சிரிக்கறாங்க”
”முட்டாளா நீங்க”
”ஆமாம் நான் முட்டாள்தான் உன்னை போய் கல்யாணம் செய்துக்கிட்டேனே சே”
”ஓ என்னை கல்யாணம் செய்ததை நினைச்சி வருத்தப்படறீங்களா”
”ஆமாம்”
”ஃபைன்” என கோபமாக சொல்லிவிட்டு எம்டியிடம் செல்ல, அவளின் அந்தக் கோபம் அவனை ஆட்டிவைத்தது
”அவசரப்பட்டு பேசிட்டோமா சே” என தன்னையே திட்டிக் கொண்டு எம்டியிடம் வந்தான்
”சாரி சார் ஏதோ டென்ஷன்ல அப்படி கண்டபடி பேசிட்டேன், ஐ அம் சாரி சார் ப்ளீஸ் சார்” என கெஞ்ச எம்டியோ