”அதான் சாரி சொல்றேனே”
”உங்க சாரியை தூக்கி குப்பையில போடுங்க”
”இங்க பாரு நானும் மனுஷன்தானே, எனக்கும் ஆசாபாசம் இருக்காதா, என் ஆசை நிறைவேறாம போனதால கடுப்பாகி”
”என்ன ஆசை“
”அதான் நானும் நீயும் கணவன் மனைவியா வாழறது பத்தி”
”அதான் கல்யாணம் ஆயிடுச்சே“
”கல்யாணம் ஆனா போதுமா சேர்ந்து வாழனும் நமக்குன்னு ஒரு குழந்தை” என சொல்ல ஹரிணியின் முகம் சுருங்கிப் போனது.
கோபத்துடன் அவ்விடம் விட்டு சென்றாள். அவள் சென்றதும் குழம்பினான் தருண்
”இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோச்சிக்கிட்டு போறா இல்லை இல்லை இவளை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது, இவளை சமாதானம் செய்தாகனும்” என நினைத்தபடியே ஹரிணியிடம் சென்றான்.
வீட்டில் ஹரிணியிருக்க தருண் வந்தும் அவள் கதவு திறக்கவில்லை, தன்னிடம் இருந்த இன்னொரு சாவியை வைத்து கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர அவளோ தருணின் உடைமைகளை அடுக்கி வைத்திருந்தாள்
”என்ன செய்ற ஹரிணி”
”உங்களோட பொருட்கள் இது, எல்லாம் சரியாயிருக்கான்னு பார்த்துட்டு எடுத்துட்டு கிளம்புங்க”