”நான் ஏன் அப்படி பேசினேன்னு எனக்கே தெரியலை, நான் பேசினது தப்புதான் அதுக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் தா, நான் ஏத்துக்கறேன் அதை விட்டுட்டு என்னை போக சொல்லாத, நீயில்லாத வாழ்க்கையை என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது ஹரிணி ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்ச ஹரிணியோ மெதுவாக யோசித்தாள். அவளை யோசிக்க விட்டுவிட்டு அவசர அவசரமாக தனது உடைமைகளை எடுத்து தன் அறையில் அடுக்கிவிட்டு வந்தான். அவளோ அவனிடம்
”நாம ஹனிமூன் போகலாம்” என்றாள் அதைக்கேட்டு குதூகலமானான் தருண்
”ஓ சூப்பர் கண்டிப்பா போகலாம்”
”ஆனா நான் சொல்ற இடத்துக்குதான் போகனும்“
”தாராளமா”
”ட்ரஸ் பேக் பண்ணுங்க, நாளைக்கு காலையில நாம போறோம்” என சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொள்ள தருணோ
”போடி போ தெனாவெட்டாவா போற, எப்படியோ ஹனிமூனுக்கு சம்மதிச்சிட்ட அது போதுமே, நடக்க வேண்டியது தன்னால நடந்தா நீ என் காலடியில கிடப்ப, கிடக்க வைக்கிறேன்” என நினைத்தபடியே பேக்கிங் செய்யச் சென்றான்.
மறுநாள் காலையில் ஹரிணியும் ரெடியாகி ஒரு டிராவல் பேக்குடன் வர கூடவே தருணும் ஒரு பேக்குடன் வந்தான், அவனின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதைக்கண்டு இளப்பமாக சிரித்தவள்
”போலாமா”
”ஓ யெஸ்” என்றான் உற்சாகமாக, அவனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அவளின் காரிடம் சென்றான் தருண் அதைக் கண்டு