(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

ஹரிணியோ அங்கு ஆலய யாத்திரைக்கு என வந்திருந்த பெரியவர்களிடம் சென்றாள்

  

”வாம்மா ஹரிணி வந்துட்டியா”

  

”ஆமாம் வந்துட்டேன் இதோ இவர்தான் தருண், என்னோட ஹஸ்பெண்ட்” என அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களும் தருணை பார்த்து புன்னகைக்க அவனும் வெறுப்பாக ஒரு புன்னகை வீசினான்.  அச்சமயத்தில் வந்த டிரெயினில் அனைவரும் ஏற ஹரிணியும் தருணை அழைத்துக் கொண்டு ஏறினாள், அவனுக்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை.

  

”ஹரிணி எதுக்காக நாம இவங்களோட போறோம்”

  

”இவங்க இளங்கோவோட சொந்தங்கள், ஒவ்வொரு வருஷமும் யாத்திரைக்கு கிளம்புவாங்க இந்த முறை இவங்களோட நாம போறோம்”

  

“அப்போ ஹனிமூன்”

  

”பக்தி மயத்தோட நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கனும்னு ஆசைப்பட்டேன் தப்பா”

  

”அதுக்கில்லை ஹனிமூனை போய் யாத்திரையோட இது எப்படி ஹரிணி எனக்கு”

  

”என்ன பிடிக்கலையா ஆமா உங்களுக்கு கல்யாணமே பிடிக்கலை இதுவா பிடிக்கப் போகுது”

  

”நோ நோ அப்படி இல்லை போலாம்” என சலிப்பாக சொல்ல அவளோ பெண்களின் மத்தியில் சென்று அமர்ந்துக் கொண்டாள், அவனை ஆண்கள் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் பேசும் கதைகளை ஹரிணி ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க தருணோ வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.

  

ஒரு வார யாத்திரை பயணம் என கேள்விப்பட்டதும் ஆடிபோய்விட்டான் தருண். ரயில் கிளம்பியது. அவனுக்கு அந்தப் பயணம் சுத்தமாக பிடிக்கவில்லை ஆனாலும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.