(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”என்ன தருண் நான் எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா”

  

”புரியுது என்ன செய்றது எனக்கு எனர்ஜி இல்லைம்மா, எதுவாயிருந்தாலும் நாளைக்குதான் சரியா போ போய் தூங்கு” என சொல்ல அவளும் நீண்ட பெருமூச்சுவிட்டு உறங்கச் சென்றாள்.

  

”கைக்கு கிடைச்சது அனுபவிக்க முடியாம போயிடுச்சே இன்னிக்கு இல்லைன்னா என்ன நாளைக்கு பார்த்துக்கிறேன் அதுக்குள்ள முடிஞ்சவரைக்கும் ரெஸ்ட் எடுக்கனும்” என நினைத்தபடியே உறங்கிப் போனான்.

  

விடிகாலையில் சீக்கிரமாகவே அவனை எழுப்பிவிட்டார்கள் அனைவரும். மறுபடியும் பேருந்தில் பயணம், இன்னொரு ஊர் இன்னொரு கோயில் ஏகப்பட்ட வேண்டுதல் அது முடிந்து ஒரு ஓட்டலில் அறைகள் எடுத்து ஓய்வெடுத்தனர் அனைவரும், மறுபடியும் ஹரிணி அவனிடம் ஆசையாக வந்தாள், அவனோ நொந்துப் போய் கைகூப்பி

  

”சாரி நாளைக்கு” என்றான் ஈனமாக அந்தளவுக்கு வலி அவனை ஆட்டிபடைக்க ஹரிணியும் நீண்ட பெருமூச்சு விட்டுச் சென்றாள்.

  

மறுநாள் ரயிலில் பயணம் வேறொரு கோயில் இம்முறை வேண்டுதல் இல்லை ஆனாலும் அவனது உடல் மிகவும் சோர்வாக இருந்தபடியால் தன்னிடம் ஆசையாக வந்தவளை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டான்.

  

அப்படியே ஒவ்வொரு நாட்களாக ஒவ்வொரு கோயில் அலைச்சல் வேண்டுதல் என ஹனிமூனின் கடைசி நாளே வந்துவிட்டது. கடைசி நாள் என்பதால் தருணும் தன்னை தயார்படுத்திக் கொண்டான் ஆனால் ஹரிணியோ ஓம்சக்தி மாலை அணிந்தபடி சிவப்பு நிற புடவையில் அவனிடம் வந்து நின்று

  

”ஓம் சக்தி பராசக்தி” என சொல்ல வாயடைத்துப் போனான் தருண்

  

”என்ன ஹரிணி இது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.