”ஐ லவ் யூ தருண்” என்றாள் பொய்யாக அதைக்கேட்டு அவனும்
”மீ டூ” என்றான் உள்ளுக்குள் வெறுப்பாக.
அடுத்து வேண்டுதலுக்கான விசயங்கள் நடந்தேறியது. தருணை வைத்து அங்கபிரதட்சணம், அடிபிரதட்சணம் முதல் என்னென்ன இருக்குமோ அவ்வனைத்தையும் செய்ய வைத்தாள் ஹரிணி. அதற்கே அவனுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது, இரவு வரவும் முதல் ஆளாக ஓட்டல் அறையில் நன்றாக உறங்கியவனை தட்டி எழுப்பினாள் ஹரிணி
”என்ன தருண் இப்படி தூங்கறீங்களே” என அவள் கிறக்கமாக பேச அவனுக்கு விநோதமாக இருந்தது, நன்றாக கண் விழித்து பார்த்தான்.
வெள்ளை ரோஜாக்களும் சிவப்பு ரோஜாக்களும் கலந்த புடவையில் கவர்ச்சியாக நின்றபடி போஸ் தந்தாள் ஹரிணி
”இதுல நான் எப்படியிருக்கேன்“
”தேவதை போல இருக்க” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்தபடியே அவனை நெருங்கி அமர அவனுக்குள் ஒரு மின்சாரம் தாக்கியது.
”ஆஹா ஹனிமூன் வந்தது நல்லதா போச்சி இன்னிக்கு இவளை ஒரு வழியாக்கறேன், நாளையில இருந்து என் வழிக்கு இவள் தன்னால வருவா” என நினைத்தபடியே அவளை கட்டியணைக்க முயல அவள் ஒன்றும் தடுக்கவில்லை மாறாக வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள் ஆனால் தருணால் முடியவில்லை, கைகால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி என அவனை ஆட்டிபடைக்க அவளை கட்டியணைக்க கூட இயலாமல் போன தன் நிலைமையை நினைத்து நொந்துக் கொண்டான்
”தருண் என்னாச்சி”
”ரொம்ப டயர்டா இருக்கு ஹரிணி, நாளைக்கு வேணா பார்க்கலாமா”