Page 16 of 18
”இத்தனை நாளும் நீங்க வேண்டுதல் செய்தீங்க இப்ப நான் செய்றேன்”
”அதுக்கு, இன்னிக்குதான் செய்வியா”
”ஏன் இன்னிக்கு என்னாச்சி“
”என்ன ஆச்சா இன்னிக்கு கடைசி நாள்மா”
”எதுக்கு”
”ஹனிமூனுக்கு“
”அடக்கடவுளே, ஓம் சக்தி பராசக்தி இப்படியெல்லாம் பேசக்கூடாது“
”ஹரிணி” என்றான் ஈனமாக
”இனிமேல என்னை பேர் வைச்சி கூப்பிடக்கூடாது, சக்தின்னுதான் கூப்பிடனும்“
”இது எத்தனை நாளைக்கு”
”இதுவா ஒரு மண்டலம்”
”என்னது ஒரு மண்டலமா அதுக்குப்புறம்”
”அதுக்கு அப்புறம் கோயிலுக்கு போய் வந்துட்டா முடிஞ்சது”
”அப்புறமாவது நமக்குள்ள நடக்குமா”
”என்னது அது”