(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

வேறுவழியில்லையே பொறுத்துக் கொண்டான்.

  

அவர்கள் சேரும் இடம் வரவும் ரயில் நின்றது, அவர்களும் இறங்கினார்கள் ஹரிணி தவறி கூட தருணிடம் செல்லவில்லை, தருண் என்ற ஒரு ஜீவன் இருப்பதையே மறந்து அந்த கூட்டத்தில் இணைந்துவிட்டாள், தருணாலும் அந்த கூட்டத்திற்கு நடுவில் ஹரிணியை பிடிக்க இயலவில்லை, ரயில் பயணம் ஒரு கொடுமை என்றால் ஹரிணியின் விலகல் அவனைப் பாடாய்படுத்தியது.

  

அனைவரும் ஒரு கோயிலுக்குச் சென்றார்கள் கடவுளை தரிசித்தார்கள், பெரியவர்களோ ஹரிணியிடம்

  

”ஹரிணி இந்த கோயில்ல ஒரு வேண்டுதல் இருக்கு அதை செய்தா உங்க குடும்ப வாழ்க்கை அமோகமா இருக்கும் என்ன சொல்ற”

  

”கண்டிப்பா செய்றேன் சொல்லுங்க”

  

”அதை நீ செய்யக் கூடாது, உன் கணவன்தான் செய்யனும்”

  

”ஓகே செய்துடலாம்” என அவளாக சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்த தருணோ

  

”என்ன நீ பாட்டுக்கு ஓகேங்கற, என்னை ஒரு வார்த்தை கேட்க மாட்டியா”

  

”என்ன தருண் நீ நான்னு பிரிச்சி பேசற, நம்ம குடும்ப வாழ்க்கை அமோகமா இருக்கனும்னுதானே அவர் வேண்டுதல் பத்தி சொன்னாரு, அதுக்கு நான் சரின்னு சொன்னது தப்பா, சாரி” என்றாள் வெறுப்பாக உடனே சரண்டர் ஆனான் தருண்

  

”சே சே அதுக்கில்லை ஹரிணி, என்ன வேண்டுதல்ன்னு தெரியாம நீ பாட்டுக்கு ஓகே சொல்லிட்டியா, அதுல கொஞ்சம் கோபம் வந்துடுச்சி அவ்ளோதான் இப்ப என்ன வேண்டுதல்தானே அது எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் சரி நான் செய்றேன் ஓகேவா” என சொல்ல அவளோ அழகாக சிரித்து

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.