”அதான் ஹனிமூன்”
”ஓம் சக்தி ஓம் சக்தி” என அவள் பக்தியுடன் அலற அதில் அவனும்
”ஓம் சக்தி ஓம் சக்தி” என பயத்துடன் அலறினான்.
வெற்றிக்கரமாக ஹனிமூன் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள் இருவரும்.
வீடு வந்தும் அவள் பக்தி பரவசமாகவே இருந்தாள், அவனையும் அவ்வாறே ஆக்கினாள். அவனோ கடுப்பாகி தன் அறையில் சோர்ந்துப் போய் படுக்கையில் படுத்தவன் மெல்ல கண்கள் மூடினான். ஏனோ அந்நேரம் அவனுக்கு பவானியின் நினைவே வந்தது
”பவானி எதுக்கு இப்படி செய்ற, ஹனிமூன் இப்ப தேவையா நானே நிவேதினியை மறக்க முடியாம கஷ்டப்படறேன், இப்ப இந்த ஹனிமூனால எனக்கு அவளோட ஞாபகம் வந்துடுச்சி, நானும் அவளும் ஹனிமூன்ல இருந்ததுதான் நினைவுக்கு வருது”
”இதை நானா செய்யலை, உங்கப்பா அம்மாதான் ஏற்பாடு செய்தாங்க“
”ப்ச் இவங்க ஒரு தொல்லை ஆமா எந்த ஊரு“
”ஊட்டி”
”ப்ச் சரி சரி போலாம்” என சொல்ல அவளும் சரிசரியென உற்சாகமாகி ஊருக்கு செல்ல பேக்கிங் அனைத்தும் செய்து முடித்து மறுநாள் விடியலுக்காக காத்திருந்தாள், விடியலும் வந்தது கூடவே அவளுக்கு விரக்தியும் வந்தது, விடிகாலையில் தருண் வீட்டில் இல்லை எங்கு தேடியும் அவன் கிடைக்காமல் குழம்பினாள் பயந்தாள். சிறிது நேரம் கழித்து ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்தபடி வந்து இறங்கினான் தருண், அவனின் இந்த பக்தியைக் கண்டு அதிர்ந்தாள்