(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”நான் உங்களை வெளிய போகச் சொன்னேன் காதுல விழலையா” என கத்த அவனோ அவளின் கோபத்தில் அதிர்ந்து அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டான்.

  

தனது கேபினுக்குள் ஹரிணியின் கோபத்தை நினைத்து நிலைகுலைந்துப் போனான். மாலை வரை வேலை இருந்தது ஹரிணிக்கு, அதன் பிறகு அவள் வீட்டிற்கு கிளம்ப தருண் குறுக்கே வந்தான்

  

”ஹரிணி”

  

”என்ன” என எரிந்துவிழ அவனோ

  

”சாரி ஹரிணி ஏதோ வாய் தவறி“

  

”மனசுல இருக்கறதுதான் வாய்தவறி வரும், யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு, உங்களுக்காக நான் எம்டிகிட்ட பேசி பேசியே வாங்கினேன் ஆனா, நீங்க என்னடான்னா ஒரே நொடியில என்னை நமக்கு நடந்த கல்யாணத்தை தூக்கி எரிஞ்சி பேசிட்டீங்க, இதுக்கு நீங்க என்னை கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாம், என்னவோ எனக்குத் துணையா இருக்கேன்னு சொன்னீங்க இதுதானா அது“

  

”அய்யோ சாரி ஹரிணி நான் வேணும்னே அப்படி பேசலை, நைட்டெல்லாம் வேலை பார்த்துட்டு காலையில விட்டுக்கு வந்தேன், லீவு கேட்டேன் நீ தரலை அந்த கோபத்தில அப்படி பேசிட்டேன்”

  

”போதும் இனி பேச்சுக்கு இடமில்லை, உங்க வழி வேற என் வழி வேற இனிமேல நாம ஒண்ணா வாழ வேண்டாம்” என சொல்லிவிட அது அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது

  

”அப்படி சொல்லாத ஹரிணி, சின்ன விசயத்துக்காக இப்படி கோச்சிக்கலாமா“

  

”எது சின்ன விசயம் நீங்க பேசினது சின்ன விசயமா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.